வைத்தியர் ஷாபியை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb