பாதசாரிகளுக்கு அசெளகரியம்: யாழ். மத்திய பஸ் நிலைய வியாபாரிகள் சிலருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் பாதசாரிகளுக்கு அசெளகரியம் ஏற்படுத்தும் வகையில், கடைகளுக்கு முன்பாக பொருட்களை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் கடைகளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கையில் யாழ். மாநகர சபை இன்று ஈடுபட்டது.

யாழ். மாநகர சபை அனுமதி வழங்கிய இடத்திற்கு மேலதிகமான இடத்தில் பொருட்களை வைத்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 50-ற்கும் மேற்பட்ட கடைகள் முன்பாகவிருந்த பொருட்கள் அகற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb