ஏழைகளின் துக்கத்துக்கு தீர்வு காணல்: புதுவருடத்தில் முதல் முன்னுரிமை

உங்களால் இதை நம்ப முடிகிறதா? பத்து வருடங்களில் வறுமையை 17 விகிதத்தினால் குறைப்பது எந்த நாட்டிலும் உண்மையில் ஒரு அதிசயமே. பெரும்பாலும் இந்த வருடங்களில் நான் நாட்டிலேயே இருந்துள்ளேன்.பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் தொடர்பான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தைத் தவிர அப்படியான அதிசயம் எதுவும் நடக்கவில்லை. 2018 ஜூலைஃஆகஸ்ட் மாதங்களில்; நான் திரும்பவும் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தேன். நான் கண்டது என்னவென்றால் கொழும்பில் அதிகரித்துள்ள வறுமையையே.

லக்சிறி பெர்ணாண்டோ

‘எவனொருவன் துக்கத்தைக் காண்கிறானோ அவனே துக்கம் தோன்றுவதையும் கூடக் காண்கிறான், அவனே அதன் முடிவையும் கூடக் காண்கிறான் மற்றும் அது முடிவதற்கு வழி வகுக்கும் பாதையையும் அவன் காண்கிறான்’ – புத்தபெருமான்

பெருமளவு கொண்டாட்டங்களுடன் புத்தாண்டு விடிந்தது. தலைநகரிலும் மற்றும் நகரங்களிலும் மில்லியன் கணக்கான மக்கள் அதை விமரிசையாகக் கொண்டாடினார்கள், ஆனால் மில்லியன் கணக்கான மக்கள் கூட அந்த நாளில் பட்டினியால் வாடினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஸ்ரீலங்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் தீர்க்க வேண்டிய முதல் அவசியமாகக் காணவேண்டியது என்னவென்றால் ஏழைகளின் துக்கத்தை தீர்ப்பதுதான். நாங்கள் அநீதியை, நிலையின்மையை மற்றும் வன்முறையைத் தவிர்க்க விரும்புவோமானால். அது ஒரு போராட்டமாக இருந்தால், முதலில் அது பொருளாதார நீதி, பட்டினியில் இருந்து சுதந்திரம் மற்றும் ஏழ்மை, சிறப்பான வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஏழைகளின் பொருளாதார மேம்பாடு என்பனவற்றுக்கான போராட்டமாகத்தான் இருக்கும். அந்த நடவடிக்கையில் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும், ஏனென்றால் அப்படியில்லையாயின் சிறிய குழுக்களாக உள்ள கேள்விக்குரிய நபர்களினால் அரசியல் முன்முயற்சிகள் கைப்பற்றப்பட்டுவிடும்.

ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தின் பெயரால் மீண்டும் யகபாலன அயோக்கியர்களின் (இப்படி நான் சொல்லலாமா) பின்னால் அணி திரளுவதால் எந்தப் பயனும் இல்லை, ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே மக்களின் பொருளாதாரா உரிமைகளுக்கு மட்டுமன்றி ஆனால் பெரும்பாலான ஜனநாயக உரிமைகளுக்கும் துரோகம் இழைத்துள்ளார்கள். முன்னாலுள்ள பணி சாத்தியமான மாற்றீடுகளை தேடுவதாகும். வரவுள்ள எதிர்காலத்தில் அரசாங்கம் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீனமான மற்றும் விமர்சனத்துக்குரிய அறிக்கைகள் என்பனவற்றுக்கு எதிராகச் செல்லக்கூடிய சாத்தியம் உள்ளது. அவர்கள் ஏற்கனவே அவற்றை ‘கறுப்பு ஊடகங்கள்” என அச்சுறுத்தி உள்ளார்கள்.

உலக வங்கி மற்றும் சர்வதேச சமூகம் என்பன ஸ்ரீலங்காவிலும் மற்றும் உலகத்திலும் உள்ள வறுமையை குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன. கடந்த காலத்திலும் மற்றும் தற்போதும் உள்ள ஸ்ரீலங்கா அதிகாரிகள் பத்து வருடங்களுக்குள் தாங்கள் வறுமையை 22.7 விகிதத்தில் இருந்து வெறும் 6.1 விகிதத்துக்கு குறைத்து விட்டதாக கட்டுக்கதையைப் பரப்பி முன்னைய நிறுவனங்கள் பாடும் அதே பாட்டைப் பாடுகிறார்கள். அது ஒரு அதிசயமா அல்லது கட்டுக்கதையா?

சர்வதேசக் காட்சி

கடந்த வருடமான 2018,; உலகம் முழுவதும் வியத்தகு நிகழ்வுகளைக் கண்டுள்ளது. உள்ளக முரண்பாடுகளால் பெரும்பாலான முன்னாள் நவதாராளவாத நாடுகள் நொறுங்கி வருகின்றன. அவற்றின் போலித்தனமான முதலீட்டுச் சந்தைகள் மற்றும் பங்குஃநிதி ஏற்பாடுகள் காரணமாக அவைகளால் இன்னமும் 2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்து வெளியே வர இயலவில்லை.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிநிறுத்தம் காரணமாக ஏற்கனவே 400,000 வேலை செய்யும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியதின் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையை மூடப்போவதாக அச்சுறுத்துகிறார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எதிர்காலத்தில் வேறு பல நாடுகளில் தாக்கங்களை அதிகரிக்கும். பிரான்சில் பக்கச் சார்பற்ற நபரான இமானுவல் மக்ரோன் வறிய மக்களின் மனக்குறைகளைத் தீர்த்து வைப்பார் என்று மக்கள் நினைத்த அதேவேளை, அவரோ முன்னாள் ஜனாதிபதியைக் காட்டிலும் மிக மோசமாக மாறியுள்ளார். அவரது எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தவறான பொருளாதார நிருவாகம் என்பன அங்கு முன்னோடியில்லாத ஒரு ‘மஞ்சள் சட்டை’ இயக்கத்தை தோற்றுவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரும் புதிராக மாறியுள்ளது மற்றும் பிரிக்ஸிட் மட்டுமே அந்தப் பிரச்சினைக்கான முக்கிய காரணமாக உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் என்பனவும் நெருக்கடியின் மத்தியில் உள்ளன. மிகவும் ஆச்சரியமாக இருப்பது பிரித்தானியாவின் அரசியல் முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி. ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்படிக்கை அல்லது உடன்படிக்கை இல்லை என்கிற புரியாத புதிர் உலகிலேயே மிகப் பழைமையான இந்தப் பாராளுமன்றத்தில் ஒரு அசாதாரண நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு உடன்படிக்கை வெளியேற்றத்துக்கான ஒரு பகுத்தறிவுப் பாதையாகத் தோன்றிய போதிலும் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்கள் குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் பற்றி பிரித்தானிய மக்கள் தீவிர சந்தேகம் கொண்டுள்ளார்கள்.

அப்படியான ஒரு பின்னணியின் கீழ் ஸ்ரீலங்கா எந்தவொரு தேசிய பாதுகாப்பும் இல்லாமல் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியம் என்பனவற்றின் கட்டளைகளின் கீழ் கடுமையான சுதந்திர வர்த்தகத்தை பெருமிதத்துடன் முன்னெடுத்துச் செல்கிறது.

இதன் கீழுள்ள காரணங்கள்

முன்னோடியில்லாத இந்த நிகழ்வுகளின் பின்னாலுள்ளது என்ன? 2007 முதல் 2016 வரையான காலப் பகுதியில் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ‘சமமற்ற செல்வ விநியோகம்’ அதிகரித்துள்ளது என்று புளும்பேர்க் பத்திரிகை (22 செப்ரெம்பர் 2018) அறிவித்துள்ளது. அதிகம் தீவிரமுள்ளது அமெரிக்காவில்தான் மற்றும் தீவிர நகரமயமாக்கல் காரணமாக சீனாவும் இதில் இருந்து விலக்கப்படவில்லை. சுவிட்சலாந்தின் கிரடிட் சுவிஸ் வங்கியினால் மிகவும் சமீபத்தைய தகவல்கள் தரப்பட்டுள்ளன. உலகின் மொத்த பொருளாதாரத்தின் அளவு 4.6 விகித வளர்ச்சியுடன் சுமார் 317 ட்ரிலியன் அமெரிக்க டொலர்களாகும். 2017ல் உலகப் பொருளாதாரத்தின் அளவு 14 ட்ரிலியனால் அதிகரித்துள்ளது. ஆனால் இதன் பெரும்பகுதியை விரைவாகக் கவர்ந்துகொண்டது யார்?

இரண்டு பாரிய முரண்பாடுகள் உள்ளன. திரும்பவும் கிரடிட் சுவிஸ் வங்கியின் தரவுகள் தெரிவிப்பது, வட அமரிக்கா மற்றும் ஐரோப்பா என்பன ஒருமித்து மொத்த செல்வத்தின் 60 விகிதத்தைக் கொண்டுள்ளன, ஆனால் உலகின் வளர்ந்தோர் சனத்தொகையில் 17 விகிதத்தையே கொண்டுள்ளன. இது நியாயமானதா? சர்வதேச சமூகம் மற்றும் அரசுசார மனித உரிமை நிறுவனங்கள் என்று அழைக்கப் படுபவை இந்த நிலமை பற்றி என்ன சொல்கின்றன?

இரண்டாவது பாரிய முரண்பாடு இந்த நாடுகளுகளுக்கும் மற்றும் எங்கள் நாடுகளுக்கும் உள்ளிருப்பது. ஐரோப்பிய ஒன்றியத்தில்; உச்சத்தில் உள்ள 1 விகிதத்தினர் அனைத்து வருமானத்திலும் 12 விகிதத்தை விழுங்கும் அதேவேளை கீழுள்ள 50 விகித்தினருக்கு மீதமாக இருப்பது வெறும் 22 விகிதம் மட்டுமே. கீழேயுள்ள 10 விகிதத்தினரைக் கணக்கிட்டால் அவர்களின் பங்கு சுமார் 2 விகிதம் மட்டுமே. சுற்றுப்புற நாடுகளான துருக்கி, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிழக்கு ஐரோப்பிய பங்காளர்கள் என்பனவற்றுக்கு மட்டுமன்றி ஆனால் மத்தியில் உள்ள ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் இந்த சூழ்நிலை மிகவும் பயங்கரமானது. அதனால்தான் மஞ்சள் சட்டை மற்றும் பிரிக்ஸிட் போன்ற செயற்பாடுகள் இயங்குகின்றன. அமெரிக்காவில் உச்சியில் உள்ள 1 விகிதத்தினர் 20 விகித செல்வத்தை விழுங்கும் அதேவேளை கீழேயுள்ள 50 விகிதத்தினருக்கு எஞ்சியிருப்பது வெறும் 20 விகிதம் மட்டுமே. மிகவும் கீழேயுள்ள 10 விகிதத்தினரைப்பற்றி பேசவே தேவையில்லை. அதற்குப் பொருத்தமான எண்ணிக்கை எதுவுமில்லை. அமெரிக்க கினி குணகம் ஆபிரிக்காவுக்கு மிகவும் ஒத்திருக்கிறது.

ஸ்ரீலங்கா உட்பட வளரும் நாடுகளுக்கு வருமான சமத்துவமின்மை மிகவும் பரந்த அளவில் (மற்றும் உருமறைப்பானதாகவும் கூட) இருப்பதால் அதைப்பற்றிய கேள்விக்கே இடமில்லை. மிகவும் அதிக அளவிலான பில்லியனர்கள் இப்போது இந்தியாவில்தான் உள்ளார்கள். சீனாவில் ஜனாதிபதி ஸீ சோஷலிச வழியிலான பொருளாதார சமத்துவமின்மையை திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், மாறாக சீனாவும் இந்த செல்வந்தர்கள் அளவில் அதிகம் பின்னால் இல்லை.

ஸ்ரீலங்காவின் நிலை என்ன?

மேற்கு நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் அவைகள் இடும் கட்டளைகளை விஞ்சும் அளவிற்கு ஸ்ரீலங்கா மேலும் மேலும் ஒரு நவ காலனித்துவ நாடாக மாறி வருகிறது. இது உலக மயமாக்கல் அல்லது போலி சர்வதேசியவாதம் என்கிற முகவுரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச நாணயநிதியம் மற்றும் உலக வங்கி என்பனவற்றின் கட்டளையின் கீழ் நாடானது நவ தாராளவாதத்துக்கு போட்டிபோடுகிறது, அதேவேளை பல மேற்கத்தைய நாடுகள் அதைக் கைவிட்டுள்ளன. ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான பெரும்பாலான நலன்புரி வலையமைப்புகள் ஏற்கனவே கலைக்கப் பட்டுள்ளதுடன் மீதமுள்ள பாதுகாப்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

அரசாங்கத் துறைகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. உதாரணத்துக்கு வறிய நபர் இன்னமும் அரசாங்க வைத்தியசாலைக்கு அல்லது மருத்துவமனைக்கு போவதற்கு வசதியுள்ளது ஆனால் பெரும்பாலான மருந்துகளை தனியார் மருந்தகங்களிலேயே பெறவேண்டியுள்ளது. பாடசாலைகளின் பங்களிப்பு அளவு திருப்திகரமாக இருந்தாலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கு தேவையான வசதிகள் போதியளவு கிடைப்பதில்லை. நகர்ப்புற பகுதிகளில் உள்ள வசதிகள் உள்ள பாடசாலைகளில் கூட குறைவான வருமானம் பெறும் அல்லது வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மற்றப் பிள்ளைகளைவிட நிதிப் பின்னணி குறைவான காரணத்தால் சமாளிப்பது கடினமாக உள்;ளது.

90 பில்லியன் டொலர் பொருளாதாரத்துடன் தலைக்கு 4,000 டொலர் வருமானம் என்கிற அடிப்படையில் ஸ்ரீலங்கா இப்போது நடுத்தர வருமானம் (குறைந்த) பெறும் நாடாக பெருமிதம் கொள்கிறது. எனினும் தற்போதைய கணிப்புகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் கூட வருமான இடைவெளி அதிகரித்துள்ளது. உச்சத்தில் உள்ள 10 விகிதத்தினர் 32விகித வருமானத்தை பங்கீடு செய்யும் அதேவேளை கீழுள்ள 10 விகிதத்தினருக்கு எஞ்சியிருப்பது 2 விகிதம் மட்டுமே. அதிக மாற்றங்களோ அல்லது மிகவும் மோசமான போக்கோ இல்லாத 2012 புள்ளிவிபரங்கள் இவை. உச்சியிலுள்ள முதல் 20 விகிதத்தினர் அநேகமாக தேசிய வருமானத்தில் 50 விகிதத்தைக் கொண்டிருப்பார்கள் அதேவேளை கீழே உள்ள 20 விகிதத்தினர் 5 விகிதத்தை மட்டுமே கொண்டிருப்பார்கள். இது நியாயமானதா? அல்லது வறியவர்களை அவர்களின் சோம்பேறித்தனத்துக்கு அல்லது அவர்களின் கர்மவினைக்காக வெறுமே அவர்களை பழி கூற முடியுமா? அல்லது வறுமை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் சூழ்நிலைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச மற்றும் அவர்களின் கட்டமைப்பு மற்றும் கொள்கைகள் காரணமா?

வருமானத்தில் பிராந்திய ரீதியாக உள்ள ஏற்றத்தாழ்வுகளும் கவலை தருவதாக உள்ளன. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மொனராகல, மன்னார் மற்றும் மட்டக்களப்பு என்பன வரிசையில் மிகவும் கீழே உள்ளன. இந்த மாவட்டங்களில் சில சிறுபான்மையினர் வாழும் மாவட்டங்கள், போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவை. எனினும் உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அதேபோன்ற எண்ணங்கொண்ட நிறுவனங்களும் கடந்த வருடங்களில் ஸ்ரீலங்கா வறுமையைக் குறைத்ததாகப் பாராட்டியுள்ளன?

உத்தியோகபூர்வ வறுமைக்குறைப்பு கணக்கில் உள்ள அபத்தங்கள்?

ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் உலக வங்கி என்பனவற்றின் கூற்றின்படி, 2002 மற்றும் 2012 என்பனவற்றுக்கு இடைப்பட்ட பத்து வருடங்களில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது! ஐபிஎஸ் போன்ற கொள்கைச் சிந்தனையாளர்கள் கூட அதைப்பற்றி கேள்வி கேட்கவில்லை. உலக வங்கியின் பெரும் பொருளாதார நிபுணரான டேவிட் நியுஹவுஸ் மார்ச் 2017ல் தெரிவித்தது கீழே தரப்பட்டுள்ளது.
“ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து, வறியவர்களின் எண்ணிக்கை 22.7 விகிதத்தில் இருந்து 6.1 விகிதமாக 2002 மற்றும் 2012ஃ13 ஆண்டுகளுக்கிடையில் குறைவடைந்தள்ளது. அதே காலப்பகுதியில் தீவிரமான வறுமை 2012ஃ13 ல் ஸ்ரீலங்காவில் 13 விகிதத்தில் இருந்து 3 விகிதத்திலும் குறைவாகக் குறைவடைந்தள்ளது – இது மோதலுக்குப் பின்னான அநேக ஸ்ரீலங்காவின் அயல் நாடுகள் மற்றும் ஒப்பிடக்கூடிய இதர நாடுகளைவிடக் குறைவானதாகும்” (‘ஸ்ரீலங்காவின் வறுமை பற்றிய புரிந்துணர்வு’, 2 மார்ச் 2017).

உங்களால் இதை நம்ப முடிகிறதா? பத்து வருடங்களில் வறுமையை 17 விகிதத்தினால் குறைப்பது எந்த நாட்டிலும் உண்மையில் ஒரு அதிசயமே. பெரும்பாலும் இந்த வருடங்களில் நான் நாட்டிலேயே இருந்துள்ளேன்.பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் தொடர்பான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தைத் தவிர அப்படியான அதிசயம் எதுவும் நடக்கவில்லை. 2018 ஜூலைஃஆகஸ்ட் மாதங்களில்; நான் திரும்பவும் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தேன். நான் கண்டது என்னவென்றால் கொழும்பில் அதிகரித்துள்ள வறுமையையே.

இந்த அபத்தங்கள் யாவும் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் (ஓபிஎல்) அபத்தமான கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தொழில்நுட்பக் குறிப்பின்படி ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 2030 கிலோகலோரிகள் தேவை. அது சரியானது அல்லது உயர்வானதும் கூட. 2002ல் இந்த இலக்கினை ஒரு மாதத்துக்கு நிறைவு செய்வதற்கு ஒரு நபருக்கு அவசியமான குறைந்தளவு செலவினை அவர்கள் கணித்துள்ளார்கள். இதில்தான் அந்த அபத்தம் உள்ளது. 2002ல் 1423 ரூபாவாகவும் மற்றும் 2018ல் 4707 ரூபாவாகவும் அந்த செலவு உள்ளது. இதுதான் வறுமைக் கோடாக (ஓபிஎல்) வரையறுக்கப்பட்டுள்ளது, இதன் கருத்து ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தேவையான 2030 கிலோகலோரிகளையும் அடைவதற்கு அவர் செலவழிக்கவேண்டிய தொகை வெறும் 157 ரூபா மட்டுமே!

மதாந்தம் 4707 ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மொத்த சனத்தொகையில் 6 விகிதமானவர்களாக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கலாம். அவர்களின் தரப்பட்டுள்ள தொழில் நிபுணத்துவத்தைப் பார்க்கும்போது இதுவும் கூட சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. எனினும் அவர்களின் தொழில்நுட்பக் குறிப்பிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு நபர் மற்ற அவசியமான அடிப்படைத் தேவைகளைவிட, ஒரு நாளுக்குத் தேவையான 2030 கிலோகலோரிகளையும் எப்படி 157 ரூபாவுக்கு பெறலாம் என்பது பற்றி குறிப்பிடப் படவில்லை;லை!

புதிய சிந்தனை தேவை

ஏழ்மை மற்றும் வறுமையை அலட்சியம் செய்வது உலகளாவிய போக்கு மற்றும் ஒரு பிரச்சினையும் ஆகும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் பொருளாதார அமைப்புகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மற்றும் இன்னமும் வறுமையான நாடுகள் மீது தங்களின் விதிமுறைகளின் கீழ் நடக்கும்படி கட்டளையிடுவதால்தான் இந்த அலட்சியப் போக்கு உருவாகிறது. பணக்கார நாடுகளையோ அல்லது அவர்களின் சர்வதேச சமூகத்தைப் பற்றிய பேசவேண்டிய அவசியம் இல்லை. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உலக வங்கி கணக்கிட்டுள்ள வறுமைக் கோடு நாளொன்றுக்கு 1.20 அமெரிக்க டொலர்கள் இது உலகளாவிய அடிப்படை வருமானம் (யுபிஐ) இல்லாத மக்களின் துக்கங்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டு மேற்கொள்ளப்பட்டது. முப்பது வருடங்களின் பின்னர் 2015ல் அது நாளொன்றுக்கு 1.90 அமெரிக்க டொலராக உயர்த்தப்பட்டது, இப்போது கூட அதற்கு கீழேயே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. உலகில் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள். இன்னமும் அது ஒரு குறைவான மதிப்பீடு ஆகும். அது தெளிவானதாக இல்லை, அவர்களும் எங்கள் அதிகாரிகளைப்போலு ஒரு கிலோஜூல் கணக்கீடு செய்தார்களோ என்னவோ.

வெறும் வறுமை மட்டுமே உலகின் அநீதி அல்ல இருப்பினும் நீங்கள் அதைக் கணக்கிடுகிறீர்கள். பரந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் அநீதியானவை. கடந்த வருடங்களில் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஸ்ரீலங்காவில் அதிகரித்து வருவதுடன் இப்போது தாங்க முடியாத ஒரு நிலைக்கு வந்துள்ளது. இது எந்தவொரு பணக்காரருடையதோ அல்லது வியாபார நிறுவத்தினதோ நேரடியான தவறு இல்லை ஆனால் அரசியல்வாதிகள் பொறுப்பாகவுள்ள கட்டமைப்பு மற்றும் கொள்கையின் தவறுகள்.

நான் கடைசியாக ஸ்ரீலங்காவுக்கு வந்தபோது தங்கியிருந்த இரத்மலானயில், காலி வீதியின் இரு பக்கங்களுக்கு இடையிலும் பாரிய வித்தியாசம் இருந்தது. கடற்கரைப் பக்கமாக இருந்த பகுதியில் பிரதானமாக வறியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையைச் சந்திக்க அவர்கள் போராடி வருகிறார்கள். நிலப்பகுதியில் செல்வம் கொழிக்கும் உயர் நடுத்தர வகுப்பினர், உயர்ந்த மதிற் சுவர்கள்,நவீன சொகுசு வாகனங்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக கண்காணிப்பு கமராக்கள் சகிதம் வாழ்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்குள் பிச்சைக்காரர்கள் தொகை இங்கு அதிகளவில் பெருகியுள்ளது. இந்த சூழ்நிலையில் சில மோசடிப் பேர்வழிகள் இந்த நிலமையை பயன்படுத்திக் கொள்ளக்கூடும் ஆனால் பிச்சைக்காரர்களுக்கு எதிராக நிலவும் தப்பெண்ணங்கள் முற்றிலும் தேவையற்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தொண்டு ஸ்தாபனங்கள் என்ன செய்கின்றன என்று எனக்கு சந்தேகம் தோன்றியது.

முடிவுரை

மனித உரிமைகள் பற்றிய பிரச்சாரங்களில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை முன்னணியில் கொண்டுவருவதற்கு நாட்டில் ஒரு அழுத்தம் தேவை. ஒரு சிலவற்றைத் தவிர வெளிநாட்டு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் பல வெளிப்படையாக இந்த அம்சங்களைப் புறக்கணிக்கின்றன.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தும்படி தற்போது விடுக்கும் கோரிக்கை முற்றிலும் நியாயமான கோரிக்கை. அக்கறையுள்ள மக்கள் அனைவரும் நிபந்தனையற்ற விதத்தில் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

இதற்கு முன்னர் தகுதியான அனைவருக்கும் உலகளாவிய அடிப்படை வருமானம் (யுபிஐ) கிடைக்கவேண்டும் என்று நான் எழுதியிருந்தேன். அது 10,000 ரூபா என்கிற வரம்பில் இருக்கலாம். சனத்தொகையில் அடி மட்டத்தில் உள்ள 20 விகிதம் பேர்கள் அதற்கு உரிமையானவர்கள், மற்றும் எந்தவொரு ஜனநாயக அரசினாலும் அதை வழங்க இயலும்.

அரசியல் ஜனநாயகம் பொருளாதார ஜனநாயகத்துடன் இணைந்து இருக்க வேண்டும். பொருளாதாரத்தினால் நல்ல ஆட்சியினை நிறுவ முடியும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb