பதியுதீன் அமைச்சு பதவியை ஏற்றால் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டால் அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நம்பிக்கையை வென்றாலும் நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று இந்த அரசாங்கத்தை பாதுகாப்பது தமிழ் தேசிய கூட்மைப்பு மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியவர்களே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb