போதைப்பொருளுடன் கைதான ஈரானியர்கள் தடுப்பு காவலில்

காலி துறைமுக கடற்பரப்பில் கப்பல் ஒன்றிலிருந்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரானியர்களையும் எதிர்வரும் 19 வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகத்துக்குரியவர்கள், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

காலி கடற்பரப்பில் நேற்று முன்தினம் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் இருந்து 70 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 812 கிராம் அபீன் முதலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb