நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்ணான்டோவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நீர்கொழும்பு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த் 53 வயதுடைய ஜயவீர ஆரச்சிகே ​ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb