முன்னாள் நீதவான் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்தமை தொடர்பில் பணித் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதவான் திலின கமகே உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

போலியாக தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி ´சகுரா´ என்ற யானை குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்ததால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக கூறி சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளரான உபாலி பத்மசிறி, அந்தத் திணைக்களத்தின் எழுதுவினைஞர் பிரியங்கா சஞ்சீவனி மற்றும் அந்த யானைக் குட்டியின் முன்னைய உரிமையாளரான சந்திரரத்ன பண்டார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb