தொடரும் தமிழ் அரசியல் கைதி கனகசபை தேவதாஸனின் போராட்டம்

தனது வழக்கை முன்கொண்டு செல்வதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க கோரும் தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன், கடந்த 5 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு எஸ்.பி.பி. மங்களராஜா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் முன்வராத காரணத்தினால், தன்னுடைய வழக்கை தானே வாதாடிய குறித்த கைதி, வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பிணைக் கோரிக்கையை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb