ஜெர்மனி: முக்கிய தலைவர்களின் ரகசிய தகவல்கள் திருட்டு

ஜெர்மனியில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் ரகசிய தகவல்கள், இணையதளம் மூலம் ஊடுருவி திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மெர்க்கெல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வீட்டு முகவரி, தனிப்பட்ட செல்லிடப் பேசி எண்கள், கடிதங்கள், பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கியதற்கான விவரங்கள், அடையாள சான்று ஆவணங்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் இணையதளம் மூலம் ஊருடு திருடியதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அந்தத் தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டதாகவும் அரசு கூறியுள்ளது.

Share:

Author: theneeweb