கார்த்திகேசன் நூற்றாண்டு நினைவு தின நிகழ்வு

முற்போக்காளர்களை இனங்கண்டு, அவர்களை நினைவு கூர்ந்து அறிமுகப்படுத்த வேண்டும் எனும் அவாவுடன் கி.பி. தோழர் என அனைவராலும் அறியப்பட்ட பசுபதி சீவரத்தினம் அவர்கள் தலையிலான ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கில் பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி, கல்வியின் கலங்கரை விளக்கு கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தின நிகழ்வு ஜூலை 16, 2019 தினம் சிறப்புற நடந்தேறியது. நிகழ்ச்சி நிரல் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரலுடன் கார்த்திகேசனின் நீண்டகால கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சுப்பையா அவர்களினது கட்டுரையும் இணைக்கப்பட்டு பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. முக்கிய ஒழுங்குதாரராக சசிரேகா சுந்தரம் ஏற்பாட்டுக் குழுவின் பல பொறுப்புகளையும் ஏற்று நடாத்தினார்.

நிகழ்ச்சியில் மலையகம், கொழும்பு, திருகோணமலை, வவுனியா, பரந்தன், கிளிநொச்சியென நெடுதூரம் பயணித்து வந்த அபிமானிகளும், யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பங்கு பற்றியோரும் என கணிசமான தொகையினருடன் நிகழ்ச்சி ரங்கன் தேவராஜன் (சட்டத்தரணி) தலைமையில், பல்வேறு தலைப்பில் கார்த்திகேசனையும், கார்த்திகேசனின் செயற்பாடுகளையும் நினைவு கூர்ந்து பேசப்பட்டது. பல தடவைகள் கார்த்திகேசன் போன்று ஆளுமையுள்ள ஆழமான அரசியல் அறிவுடன் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட இனியொருவர் கிடைக்கமாட்டார் எனவும், அவரது கல்வி சார்ந்த அனுபவம் எவ்வாறு சமூகத்தினை மேம்படுத்தியது எனவும் கூறப்பட்டது. தற்போதைய சிறீலங்கா அரசியல் அவலநிலை பற்றியும், மக்களின் எதிர்காலம் என்னவாகும் எனும் ஏக்கம் கலந்த பேச்சுகளும் இடையிடையே வந்தன.

Image may contain: 2 people, people standing and indoorன்னை வளர்த்த தந்தையார் அமரர் சட்டத்தரணி கே.சி. நித்தியானந்தா, வேறு உறவினர்கள் காரத்திகேசனுடன் வைத்திருந்த நட்பு, தோழமையைக் கனம் பண்ணியும், தானும் கார்த்திகேசன் மேல் வைத்திருந்த அபிமானத்தால், தனது வேறு கட்சிப் பிரமுகர்களுடன் நிகழ்ச்சியில் பங்கு பற்ற வந்திருந்த மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சரும், இந்நாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கார்த்திகேசனின் படத்திற்கு மாலை அணிவித்து கெளரவித்தார்.

பேச்சாளர் பட்டியல் இறுதியில் கி.பி.தோழர் இக்காலகட்டத்தில் முற்போக்காளர்களை நினைவுகூருவதன் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தி, முற்போக்காளர் பட்டியலில் கார்த்திகேசனை முதலிடத்தில் வைத்து இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்திருப்பதாகவும், இது போன்று 30 க்கும் மேலுள்ள முற்போக்காளர்களை ஒவ்வொருவராக நினைவுகூரத் திட்டமிட்ட உள்ளதாகவும் தெரிவித்து நன்றியுரையைக் கூறினார்.

கார்த்திகேசன் தனது காலத்தில் சமூகத்திற்கு ஆற்றிய சேவையைக் கனம் பண்ணி, ராஜா கிரீம் ஹவுஸ் உரிமையாளர் மண்டபத்தினை இலவசமாக வழங்கியதுடன், பங்கேற்றோர் அனைவருக்கும் சிற்றுண்டி, குளிர்பானமும் பரிமாற ஒழுங்கு செய்தார்.

கார்த்திகேசனின் முன்னாள் நெருங்கிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் அமரர் குமாரசாமி அவர்களின் புதல்வன், கார்த்திகேசனின் பிறந்த தினமாகிய ஜூன் 25 உதயமாகியவர். அவருடன் தனது இல்லத்தில் ஒவ்வொரு வருடமும் பிறந்ததினத்தை கொண்டாடியவர், இன்று அவுஸ்திரேலியாவிலிருந்து தனது தாய்வழி சிறிய தகப்பனும், முன்னாளில் கார்த்திகேசனின் அயலவரான கோபால் என்பவர் தயாரித்த செப்பிலான உருவப்படத்தை அவர் மூலமாகவே அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்.

‘நூலகம்’ நிறுவனத்தினர் கார்த்திகேசன் 25வது ஆண்டு நினைவாக பிரசுரிக்கப்பட்ட நூலினை ஆவணகப்படுத்திய இணைப்பு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

வெவ்வேறு விதமாக இந்நிகழ்வில் பங்கேற்றோர் ஒரு நிறைவான நிகழ்ச்சியின் பங்கு கொள்ளக் கிடைத்தது பற்றி திருப்தியுடன் சென்றனர்.

படங்கள் புதிய ஜனநாயக மார்க்ஸிஸ-லெனினிஸ கட்சி, அனு சந்துரு ஆகியோரின் முகநூல்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

முகநூல் பதிவு: ஜானகி கார்த்திகேசன் பாலகிருஸ்ணன்

Image may contain: 15 people, including Rengan Devarajan, people sitting and indoor

 

Image may contain: one or more people, table and indoorImage may contain: 1 person, indoor

Share:

Author: theneeweb