இலவுகாத்தகிளியாகநிலாவரசி? – மு.தமிழ்ச்செல்வன்

அப்பாவின் ஊர் கோவிலில் கச்சாய் அம்மன் கோவிலில் நாங்கள் நேர்த்திவைத்திருக்கிறம் மாமா. அப்பாவந்தவுடன் நான் பாற்செம்புஎக்கவும்,அக்காஅலகுகுத்தவும்என்று. கடவுள் இருப்பதுஉண்மையாக இருந்தால் எங்களதுநேர்த்தியைஏற்றுக்கொள்வால் என 2009 காணாமல் ஆக்கப்பட்டசின்னத்தம்பிசிறிலதனின் பதினொருவயதுமகள் நிலாவரசிபெருமூச்சுடன் கூறினாள்.
அப்பா 2009 ஆம் ஆண்டுவட்டுவாகலில் வைத்துவிசாரிக்கஎனஆமிக்காரர் கூட்டிக்கொண்டுபோகும் போதுநான் எழுமாதக் குழந்தைஎனஅம்மாசொன்னவ.

#எனக்குஅப்பாவைதெரியாது,அவரைபோட்டோவில்தான் பார்த்திருக்கிறன். ஆனால் இப்பஅப்பாவைபார்க்கஆசையாய் இருக்கிறது. எனகண்கள் பணிக்ககதைசொன்னால் நிலாவரசி. பெயருக்குஏற்றமுகத்தோற்றம்,ஆனாலும் அந்தபௌர்னமி முழு நிலாவைகார் மேகம் மறைப்பதுபோன்றுஅப்பாவின் ஏக்கமும் அவளதுமுகத்தைஅவ்வவ் போதுமறைத்துகடந்துசென்றுக்கொண்டிருந்தது.

அப்பாஎப்படி இருப்பார்? இப்ப இருந்தால் எங்களோடுஎப்படி இருப்பார்? அவரைஎங்குவைத்திருக்கின்றார்கள்? வைத்திருக்கின்றார்களா? ஏன் இந்தபத்துவருடங்களாகஅப்பாபற்றிஎங்களுக்குஎந்தபதிலும் வரவில்லை? அவருக்குஏதும் நடந்திருக்குமா?எங்கடஅப்பாஅப்படிஎன்னபெரியதவறுசெய்தவர்? எனபதலளிக்கமுடியாதகேள்விகளைஅடிக்கடிக்கொண்டேசென்றாள். ஒவ்வொருபிள்ளைக்கும் தன் தந்தைதொடர்பில் இருக்கின்றஅனைத்துஆசைகளும்,கனவுகளும் நிலாவுக்கும் இருக்கிறது.
எதுவும் அறியாத இந்தபிஞ்சுவயதில் மிகப்பெரும் ஒருஏக்கத்தோடுவாழ்வதற்குநிலாசெய்ததவறுஅவள் ஒருதமிழ் குழந்தையாக இறுதியுத்தக்காலத்தில் இந்தமண்ணில் பிறந்ததே. பாடசாலைக்குசெல்கின்றபோதுதன்னுடையசகநண்பிகள் தங்களதுஅப்பாக்களுடன் பாடசாலைக்குவருவதும்,அவர்களுக்கு கை காட்டிவிடைப்பெற்றுபாடசாலைக்குள் செல்வதும் நிலாவைபெரிதும் பாதித்துவருகிறது. தான் எப்போதுஅப்பாவுடன் பாடசாலைக்குபோவன்? அப்பாவருவாரா?எனஅடிக்கடிதன்னிடம் கேள்விகேட்பதுவழக்கம் எனநிலாவின் தாய் குறிப்பிட்டார்.

பதலளிக்கமுடியாதஅந்தகேள்விக்குமௌனத்தையேதான் பதிலாகவிட்டுவிடுவதாகவும் சொன்னார்.
சிறிலதனின் மனைவிதயாநிதி(34) இரண்டுபெண் பிள்ளைகளுடன் கிளிநொச்சிபரந்தன் குமபுரம் பகுதியில் தனதுதாயுடன் வசித்துவருகின்றார். 2009.05.18 ஆம் திகதிதனதுகணவர் தனதுதந்தையுடன் வருகின்றபோதுவட்டுவாகலில் வைத்துவிசாரித்துவிட்டுஅனுப்புகிறோம் என இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர். என்னநடந்துஎன்றேதெரியவில்லை. சர்வதேசசெஞ்சிலுவைசங்கம், ஜனாதிபதிஆணைக்குழு,பரணகமஆணைக்குழு,மனிதஉரிமைகள் ஆணைக்குழு,பொலீஸ் எனபல இடங்களிலும் பதிவுகளைமேற்கொண்டும்,தகவல்களைவழங்கியும் இதுவரைஎதுவும் நடக்கவில்லை.அம்மாவின் சிறியதொகைஓய்வூதியத்திலும்,சகோதரர்களின் உதவியுடனும் வாழக்கைநகர்கிறது.எனத் தெரிவித்ததயாநிதி.

தனதுகணவர் காணாமல் ஆக்கப்பட்டவலியைவிடதற்போதுஅப்பாதொடர்பில் பிள்ளைகள் ஏக்கங்கள் அதிகம் வலியைஏற்படுத்துகிறதுஎனக் குறிப்பிட்டார். மூத்தமகள் வானுஜாவுக்குஅப்போது(2009) வயதுநான்கு. நிலாவுக்கு ஏழு மாதம் இறுதியாக 2009 மேமாதம் 16 திகதிமகளுக்கானபால்மாப் பெட்டியுடன் வந்தவர் அதனைதந்துவிட்டுகவனமாக இருக்குமாறு கூறிச்சென்றார். அன்றுதான் நாம் அவரைகண்டகடைசிநாள்.

நிலாவிபரம் தெரிந்துஅப்பாபற்றிவிசாரிக்கதொடங்கியபோதுஅவர் இயக்கத்தில் இருந்ததுபற்றியும் காணாமல் ஆக்கப்பட்டதுபற்றியும் தெரிவித்தபின்னர் என்னோடுசேர்ந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினனர்களின் போராட்டங்களில் தவறாதுகலந்துகொள்வாள். போராட்டத்தில் கலந்துகொண்டால்தான் அப்பாவைவிடுவார்கள் எனக் கூறுவாள்,பத்திரிகைகளில்,தொலைக் காட்சிகளில் இந்தவிடயம் பற்றிவரும் செய்திகளைஆர்வதோடுகேட்பாள். ஆனால் இந்தபத்துவருடங்களில் எங்களின் இந்தவிடயத்திற்குஎந்தநீதியானதீர்வும் கிடைக்கவில்லை.

எங்களதுவாழ்க்கை இரண்டுபடகில் கால் வைத்ததுபோன்றுள்ளது.அவர் இருக்கிறார் என்றநம்பிக்கையில் வாழ்க்கையைகொண்டுசெல்வதா? அல்லதுஅவர் இல்லைஎன்றமுடிவுக்குவந்துவிட்டுவாழ்க்கையினைஅடுத்தக் கட்டத்திற்குகொண்டுசெல்வதா? என்னசெய்வதுஎன்றேதெரியாதுவாழ்ந்துவருகின்றோம். அப்பாவருவார் என்றநம்பிக்கையில் நிலா இப்போதும் வாழ்ந்துவருகின்றாள்

எனவேஅவளதுநம்பிக்கையைஅப்படியேவிட்டுவிடுவதா,அல்லதுஅந்தநம்பிக்கையைகைவிடுமாறுகோருவதா? எதைச் செய்வதுஎன்றேபுரியவில்லைஎன்றார் தயாநிதி.
பாடசாலைகளில் இடம்பெறுகின்றநிகழ்வுகளில் அவளுடைசகநண்பிகள் அப்பாஅம்மாவுடன் கலந்துகொள்கின்றபோதுதன் அப்பாவின் ஏக்கத்துடன் நிலாவின் என் மீதானபார்வைஎன் மனதைவாட்டியெடுக்கும். என் பிள்ளைக்குஏன்

இப்படியொருநிலைமைஎனஅந்தஆண்டவனைநொந்துகொள்வேன். பாடசாலையிலிருந்துவீட்டுக்குஅழைத்துவருகின்றபோதுதங்களுடையஅப்பாக்களுடன் அவளதுநண்பிகள் கடற்கரைக்கும்,கடைக்கும்,கோவிலுக்கும்,பூங்காவுக்கும் போய்வந்தகதைசொல்வாள். அவளதுவார்த்தைகள் ஒவ்வொன்றும் தனதுஅப்பாவும் வந்துவிட்டால் நானும் இப்படிஎல்லாம் சந்தோசமாக இருப்பேன் என்பதாகவே இருக்கும்.
பெண் குழந்தைகளைபொறுத்தவரைஅவர்கள் அப்பாக்களுடன் ஈடுபாடுஅதிகம் அதில் என் குழந்தைகள் மட்டும் எப்படிவிதிவிலக்காக இருக்கமுடியும். என்றார் அவர்.
அவரின் பிறந்ததினம்,தந்தையர் தினத்தில் சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படத்தைபதிவிட்டுதங்களின் உணர்வுகளைவெளிப்படுத்திக்கொள்வார்கள். அடிக்கடிஅக்காவும் தங்கையும் தந்தைதொடர்பில் உரையாடுவதுகேட்கும் எங்களுக்குகண்ணீரைவரவைக்கும். நாங்கள் உணர்வுகளால் கொல்லப்பட்டஉயிர்களாகவாழ்கின்றோம் எனவலியோடுசொன்னார் தயாநிதி.
இந்தநாட்டில் இடம்பெற்றகொடியயுத்தம் இப்படிஏராளமானகுழந்தைகளைவிட்டுச் சென்றுள்ளது. நிலாவரசிபோன்றுபலர் அப்பாக்களுக்காககாத்துக்கொண்டிருக்கும் இலவுகாத்தகிளிகளாகஉள்ளனர். இவர்களின் உணர்வுகளைஅப்பாக்களாகஅதிகாரத்தில் இருக்கின்றவர்களும் புரிந்துகொள்வதாக இல்லை.

அப்பாக்கள்வருவார்கள்என்றநம்பிக்கையோடுமட்டுமேநிலாவரசிகளின் வாழ்க்கைகள் ஏக்கங்களோடுநகர்கின்றன.

Share:

Author: theneeweb