பிரதமரின் நிகழ்வுக்காக நோயாளர் நலன்புரி சங்கத்தில் பெற்ற கடன் மீளச் செலுத்தப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ள கடந்த 15-02-2019 அன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரதமர் வருகைதருவதனை முன்னிட்டு வைத்தியசாலை அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் வைத்தியசாலையின் பெயர் பலகையினையும் பிரதமரின் வருகைக்காக புதிதாக மாற்ற தீர்மானிக்கப்பட்டு அதற்கான நிதி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் கோரப்பட்டது. ஆனால் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் நிதி இ்ல்லை என்றும் பணிகளை மேற்கொள்ளுமாறும் பின்னனர் நிதி கிடைத்ததும் வழங்குவதாக வாய்மொழி மூலம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டடைமக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்து இரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவை கடனாக பெற்று அடிக்கல் நாட்டும் நிகழ்வை முன்னிட்டு பணிகளை மேற்கொண்டார்.

ஆனால் குறித்த நிதி இதுவரை மீளவும் மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்திடம் செலுத்தப்படவில்லை. அப்போது நிதியே ஒதுக்கப்டாத ஒரு திட்டத்திற்கு பெரும் எடுப்பில் அரசியவாதிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைக்க மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுக்கு நோயாளர் நலன்புரிச் சங்கத்திடம் இருந்து கடனாக பெறப்பட்ட நிதி மீளவும் இதுவரை செலுத்தப்படாது நிலுவையாக உள்ளது.

எனவே உரிய தரப்பினர் கணக்கியல் நடவடிக்கைகளுக்கு அமைவாக நிதியினை மீளவும் விரைவாக செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb