பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடமாகாண அரச பொது ஊழியர் சங்கம் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கரைச்சி பிரதேச சபை முன்பாக குறி்த போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் வடமாகாணத்தில் கொண்டுவரப்பட்டள்ள சுற்றுநிருபத்தில் மா்றத்தை ஏற்படுத்த கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமது போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும்வரை குறித்த போராட்டம் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என அவரகள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

வடமாகாணத்தில் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சாதாரணதரம் கோரப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தென்னிலங்கையில் பிரதேச சபைகளிற்கு ஆட்சேர்ப்பிற்காக அவ்வாறான கல்வி தராதரம் கோரப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை கரைச்சி பிரதேச சபையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை மீள இணைக்குமாறு தெரிவித்தும் போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது,
வடமாகாணத்தில் சுகாதார ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கு சாதாரண தரத்தில் ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்படும் என வடமாகாண சுற்றுநிருபம் தெவரிவிப்பதாகவும், அ காலத்தில் தென்பகுதியில் வெளியான ஆட்சேர்ப்பு தொடர்பான சுற்றுநிருபத்தில் கல்வி தரம் தொடர்பில் அவ்வாறான இறுக்கமான விடயங்கள் கோரப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். எனவே, ஊழியர்களின் போராட்டம் நியாயமானது எனவும், அவர்களின் நியமனம் தொடர்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb