தாய்,மகனின் வாய் மற்றும் கைகளை கட்டி வைத்து புதையல் தோண்டிய நபர்கள்

 கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  புன்னைநீராவி பகுதியில் கடந்த இருபதாம்  திகதி  இரவு ஒன்பது மணிக்கு தீடிரென வீட்டு வளவுக்குள் நுழைந்த ஏழுபேர் கொண்டு குழு ஒன்று வீட்டில் இருந்த தாய் மற்றும் மகனின் வாய், கைகளை கட்டி வைத்து விட்டு புதையல் தோண்டியுள்ளனர்.

இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணி வரை இக் கும்பல் புதையல் தோண்டியுள்ளது.14 வயது மகன் மற்றும் அவரது மாற்றுவலுவுள்ள இளம் தாய் ஆகியோரை கட்டி வைத்துவிட்டே அம் மர்ம கும்பல் புதையல் தோண்டியுள்ளது. பின்னர் அதிகாலை அவர்கள் தாயையும் , மகனையும் விடுவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இறுதி யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த மர்மகும்பல் தோண்டியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வீட்டார்  தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு இன்று(23) நீதிமன்றத்தின் உத்தரவோடு மர்ம நபர்கள் தோன்றிய இடத்தில்  தருமபுரம் போலீசார் தேடுதல் மேற்கொண்டார்கள் இதன் போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தருமபுரம் பொலிஸார் பல கோணங்கலில் விசாரனைகளை மேட்கொண்டு வருகிறார்கள்.

Share:

Author: theneeweb