தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபருக்கு 50 இலட்சம் ரூபா வழங்க தீர்மானம்

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபரை பாராட்டும் விதமாக பணப்பரிசில் வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபர் பாராட்டப்படவில்லை என குறித்த நபரின் குரல் பதிவு அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.

அந்த செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் செலுத்தியுள்ளதுடன் குறித்த நபர் பொலிஸாரிற்கு இரண்டு தகவல்கள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அதனடிப்படையில் ஒரு தகவலிற்கு 25 இலட்சம் ரூபா என்பதன் அடிப்படையில் 50 இலட்சம் ரூபா வழங்க பதில் பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

Share:

Author: theneeweb