இராணுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்புகள் 2019வருடாந்த கண்காட்சி

கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரால் புதிய கண்டுபிடிப்புகள் கண்காட்சி இன்று(24) இரணைமடு நெலும் பியச இராணுவ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வருடந்தோறும் இக் கண்காட்சியில் கிளிநொச்சியிலுள்ள இராணுவனத்தினரின் புதிய கண்டுப்பிடிப்புக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு சிறந்த புதிய கண்டுபிடிப்புக்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்புகளில் மக்களின் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் புதிய கருவிகள் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு ஏனைய பல விடயங்களிலும் புதிய புதிய கருவிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இந்த வருடாந்த கண்டுபிடிப்பு நிகழ்வில்கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, யாழ் பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் பூபாலசிங்கம் ஐங்கரன், விரிவுரையாளர் சசிகேஸ் இராணுவத்தின் பல பிரிவுகளின் கட்டளைத்தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர்

Share:

Author: theneeweb