லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினருக்கு ஜேர்மனியில் குற்றச்சாட்டு

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய நவனிதன் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2002 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் கடைமையாற்றியுள்ளதுடன், 2005 ஆம் ஆண்டு லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்வதற்கான தவல்களை வழங்கியவர் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:

Author: theneeweb