மதுபோதையில் வாகனம் செலுத்தி கைது செய்யப்பட்டவர்கள் 5262 ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 220 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 220 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 5262 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb