அலி ரொஷான் உட்பட 8 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேரையும் வழக்கு விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விகும் களுஆராச்சி, தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய பட்டபெதி ஆகிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை பிரதிவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பினும் மீண்டும் அவர்களை உரிய பிணை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அவர்களின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்போது குற்றவியல் நடைமுறை குறியீட்டின் 450 ஆவது சரத்தின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க வேண்டுமாயின் சட்டமா அதிபரின் அனுமதி வேண்டும் என மூவரடங்கிய நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டமா அதிபரின் அனுமதி இல்லாமல் பிணை வழங்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு பிரதிவாதிகளை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb