தமிழ் மக்கள் மஹிந்தவை ஆதரிக்கும் முடிவில் உள்ளனர். – கருணா

தற்போது நிலவுகின்ற அச்சுறுத்தலான சூழல்களின் அடிப்படையில், தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவிலேயே இருப்பதாக, முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இதுவரையில் சம்மந்தப்படாத, நாடாளுமன்ற உறுப்புரிமையற்ற 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டது.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் 10.00 மணி அளவில் இடம்பெற்றது.

அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவத்தின் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, இரா.பிரபாகரனின் ஈழவர் ஜனநாயக கட்சி ஆகிய தமிழ் கட்சிகளும் முஸ்லிம் உலமா கட்சியும் கைச்சாத்திட்டுள்ளன

மேலும், லிபரல் கட்சி, மௌபிம ஜனதா கட்சி, நவ சிஹல உறுமய,
ஜனநாயக தேசிய இயக்கம், ஐக்கிய இலங்கை மஹா சபை மற்றும் பூமி புத்ர கட்சி என்பனவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

Share:

Author: theneeweb