த.தே.கூட்டமைப்பின் அரசியலமைப்பை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை அர்த்தமற்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

இன்றைய விவாதத்தின் போது குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையானது அர்த்தமற்றது என பல்வேறு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரப் பகிர்வானது நாட்டை ஒன்பது பகுதிகளாக கூறுபோடும் என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தமது உரையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துக்கு கண்டனமும் வெளியிட்டார்.

அதிகாரப் பகிர்வுக்கான ஒவ்வொரு யோசனையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண முதலமைச்சர்களினால் முன்வைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அது பிளவை ஏற்படுத்தும் என இப்போது ஏன் கூறுகின்றீர்கள் என்றும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, ஆளுந்தரப்பு ஆசனத்தில் எவரும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முக்கியத்துவமிக்க பிரேரணை மீதான விவாதத்தின் போது இவ்வாறு செயற்படுவது ஏன் என்று ஆளுந்தரப்பினரிடம் மட்டுல்லாது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியினரிடமும் தாம் வினவுதாகவும் கூறினார்.

இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, அதிகாரப் பகிர்வு என்பது எப்போதும், ஒரே நிலைப்பாடாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அது மாறுபடக்கூடாது என்றவாறு மஹிந்த ராஜபக்ஷவிற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb