தற்போதைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்கள் சட்டரீதியானதைா?

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்பது தமது அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து அபிவிருத்தி கருத்திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் மற்றும் மேற்பார்வை செய்யும் பிரதான குழுவாகும். இந்தக் குழுவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடாத்தப்படுகிறது.

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை நடாத்துதல் பற்றி இறுதியாக வெளியிடப்பட்டுள்ள 2019.02.13 ஆம் திகதிய 4/2019 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையானது பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஆதாவது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவரையும், அக்குழுவின் உப தலைவராக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும், அக்குழுவின் உப தலைவராக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரையும்,நியமிக்க வேண்டும் என தெரிவிக்கிறது.

பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடர்பில் மாவட்டச்செயலகங்களுக்கு இறுதியாக அனுப்பி வைக்கப்பட்ட சுற்றறிக்கையே இது என கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதன் படியே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்படல் வேண்டும் என்று மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நடாத்தப்படுகின்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் தீர்மானங்களே சட்டரீதியானவை. அவற்றையே அமுல்ப்படுத்த முடியும்.

ஆனால் தற்போது கிளிநொச்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மேற்படி இச் சுற்றறிக்கையின் பிரகாரம் நடைபெறுகிறதா எனக் அதிகாரிகளால் கேள்வி எழுப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இடம்பெறும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் எந்த வகையில் சுற்றறிக்கைகளுக்கு அமைவாக இருக்கின்றன.எனவும் சுற்றறிக்கையின் படி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஸ்ட அமைச்சர் அல்லது உப தலைவராக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்தாங்க முடியும் அப்படியாயின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களா? இவ்வாறு இடமபெறுகின்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எந்த அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்? அதற்கான சட்ட வலு உள்ளதா? போன்ற கேள்விகளை அதிகாரிகள் சிலர் சுற்றறிகையினை அடிப்படையாக கொண்டு எழுப்புகின்றனர்.

Share:

Author: theneeweb