வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்தவர் மீது தாக்குதல்….

றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்று கொள்ள கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட தம்மை அதன் அதிகாரிகள் சிலர் தாக்கியதாக ஹம்பாந்தொட்டை மாநகர முதல்வரின் மனைவியின் சகோதரரான குணரத்ன பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தொட்டையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாஜூதீன் கொலை சம்பவம் தொடர்பில் உரிய வாக்குமூலத்தை வழங்குமாறும் இல்லையேல் தாக்கப்பட்டு சிறையடைக்கப்படுவீர் என தன்னை அச்சுறுத்தி தாக்கியதாக அவர் தெரிவித்தார்.

ஏஸ்பி லொக்கு ஹெட்டிகே என்பவரே இந்த தாக்குதலை நடத்தினார்.

இந்த விடயத்தை வெளியில் எவருக்கும் கூற வேண்டாம் என அவர்கள் கூறினர்.

இதன்பின்னர், எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் செயலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பெயர் விபரங்களை கோரினர்.

இதனையடுத்து 12 தொலைபேசி இலக்கங்களை காண்பித்து இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து தருமாறும் இல்லையேல் தான் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சிறையடைப்போம் என கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் கூறியதாக ஹம்பாந்தொட்டை மாநகர முதல்வரின் மனைவியின் சகோதரரான குணரத்ன பிரதீப் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb