காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30-இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

 காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30-இற்கும் அதிகமானவர்கள் எவ்வித தீர்வுகளும் கிடைக்காமலே உயிரிழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமது உறவுகளை மீட்பதற்காகப் போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசாங்கமோ சர்வதேச சமூகமோ நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நீதி வழங்கலில் ஏற்படும் தாமதம் உறவுகளைத் தேடுவோரின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும் எனவும் இரண்டு நாட்களுக்கு முன்னரும் தாய் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb