கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்து. குறித்த கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இணை தலைவர்களான பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், சி.சிறிதரன் ஆகியோரின் இணை தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது மாவை.சேனாதிராஜா, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களம்சார் அதிகாரிகள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இன்றய கூட்டத்தில் கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், மற்றும் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது,
இதன்போது
கிளிநொச்சி மாவட்டத்தில் 5G
தொழில்நுட்ப கோபுரங்கள் அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆராயப்பட்டது,
குறித்த கோபுரம் உருத்திரபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவு்ம, அவை இங்கு அமைக்கப்படுவதற்கான நோக்கம் என்ன என்பது தெரியவில்லை எனவும் நாடாளுமனற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பினார். இவற்றுக்காக பிரதேச சபைகளிடம் அனுமதி பெறப்பட்டதா என அவர் பிரதேச சபை தவிசாளர்களிடம் வினவினார். அவ்வாறு பிரதேச சபைகளிடம்கோபுரங்கள் அமைப்பதற்கு பிரதேச சபைகளால் அனுமதி வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இவற்றினால் ஏற்படும் சாதக பாதகமான நிலை தொடர்பில் மக்களிற்கு விழிப்புனர்வு வழங்கப்படாது அவற்கை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் அரசாங்க அதிபர் தற்போதுது மாவட்டத்தில் உள்ள வரட்சியான நிலை தொடர்பிலும், பாதிப்புக்கள் தொடர்பிலும் தெரிவித்தார். தொடர்ந்து
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் முழுமை பெறாத திட்டங்கள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டிருந்தார். பேருந்து நிலையம், விளையாட்டு மைதானம், பூநகரி குளம், மாவட்ட கலாச்சார மண்டபம், பொதுநூலகம், a9 சமாந்தர வீதி, பூநகரிக்கான குடிநீர் ஆகியன இவ்வாறு முழுமை பெறாத திட்டங்களாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி கௌதாரி முனை பிரதேசத்தில் சட்டத்திற்கு மாறாக மேற்கொள்ளப்பட்டுவரும் மண்ணகழ்வு தொடர்பில் பேசப்பட்டது. குறித்த மண்ணகழ்வினை நிறுத்தி, முறையான மண்ணகழ்வினை மேற்கொள்வதற்கும், அரச அதிபர் தலைமையிலான கழுவின் அனுமதி பெறப்படாது மத்திய அரசினால் இவ்வாறான மண்ணகழ்விற்கு அனுமதி வழங்க கூடாதுஎனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதேவேளை குறித்த செயற்பாடுகளிற்கு பொலிசாரும் துணை போவதாக தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதான காணியை பாடசாலைக்கே வழங்க மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம் எட்டியது. கிளிநொச்சி நகரில் மத்திய அரசினால் நிர்மானிக்க்படப்டுவரும் விளையாட்டு மைதான காணியில் 14 ஏக்கர்களில் 4 ஏக்கர் காணி பாடசாலையின் விளையாட்டு மைதான காணியாக உள்ளத. அதனை பாடசாலைக்கே வழங்குவதற்கு இன்று மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டது. இதேவேளை ஏனைய 10 ஏக்கர் காணிகளும் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமானது எனவும், அதனையும் பிரதேச சபையிடம் கையளிக்க கோரியும் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார். அவ்வாறு தம்மிடம் கையளித்ததன் பின்னர் அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறும் அவர் தெரிவித்தார்.
கரைr;சி பிரதேச சபைக்கு சொந்தமான நூலக காணியில் உள்ள படையினர் வெளியேறி காணியை கையளிக்குமாறு பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார். குறித்த காணியை விடுவிப்பதில் தமக்கு ஏதும் பிரச்சினை இல்லை எனவு்ம, அந்த காணியின் பயன்பாடு தொடர்பில் திட்ம் ஒன்றை தயாரித்த சம்மந்தப்பட்டவர்களிற்கு அனுப்பி அங்கிருந்து பதில் வரும் இடத்து தாம் வெளியேற முடியும் என கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தெரிவித்தார். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் மாவட்ட அபிவிரு்ததி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அரசினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களிற்கு பெரிடல் தொடர்பாக பேசப்பட்டது. முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள், மற்றும் இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களிற்கு தமிழ் மொழியில் பெயரிடவும் தீர்மானம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாக வங்கிகள், நிதி நிறுவனங்களிற்கு இவ்விடயம் தொட்பில் அறிவுறுத்தலும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

படையினர் மற்றம் சிவில் பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டக்கச்சி விவசாய பண்ணை மற்றும் விவசாச பாடசாலை காணியை படையினர் விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறித் காணியை படையினர் விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறித்த 90 ஏக்கர் காணியில் 7 ஏக்கர் வரையான காணியிலேயே படையினர் இருப்பதாகவும். அவர்கள் அங்கிருந்து மக்களிற்கான பாதுகாப்பு பணிகளை முன்னெடுப்பதாகவும், அதேவேளை போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காகவும் அங்கு இருக்க வேண்டி உள்ளதாக கிளிநாச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தெரிவித்தார். எனினும் குறித்த காணியை விடுவிப்பதில் எவ்வித பிரச்சினையும் தமக்கு இல்லை எனவும், உரிய முறைப்படி அறிவுறுத்தல் கிடைக்குமிடத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான மிகுதி 70 ஏக்கர் காணியில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் விவசாயம் செய்கிறது. அவ்கள் நெற்செய்கை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ண்மை நிலையை சம்மந்தப்பட்டவர்களிற்கும் எழுத்து மூலம் அறிவிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை வடக்கு மாகாண விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியில் சிவில் ாதுகாப்பு திணைக்களம் விவசாயம் செய்து வருவதாக இங்கு மாகாண விவசாய பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது. இன்றய தினம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் சார்ந்த எவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சமூகம் அளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கதாகும்.
Share:

Author: theneeweb