தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும்.. -ஐக்கிய தேசிய கட்சி

ஜனாதிபதி தேர்தலின் போது தமது வேட்பாளருக்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே இதனை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், பிரதமர் ரணில், அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் கருஜெயசூரிய மற்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எதிர்கட்சி அறிவிக்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளரைப் பொறுத்து குறித்த நான்கு பேரில் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அடுத்தமாதம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இணைவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தங்களுக்கு எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் சமிந்த கமகே கூறியுள்ளார்.

Share:

Author: theneeweb