பொருளாதார ரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்..

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கே முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்துக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி இருந்தார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாட்டாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் ஏற்பட்ட யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தெற்கிலும் அந்த நிலைமையே உள்ளது.

யாழ்ப்பாணத்தில் அதிக எண்ணிக்கையான தேசிய பாடசாலைகள் இருந்த போதும், தற்போது கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பல குடும்பங்கள் கடன்பிரச்சினைகளால் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

பசியுடன் பாடசாலையில் இருந்து கல்வி கற்க முடியாது.

கடன்பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, ஏனைய விடயங்களில் அவதானம் செலுத்த முடியாது.

எனவே பொருளாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

இங்குள்ளவர்களுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும்.

பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

ஆனால் மக்களுக்கு தேவையான எதனையும் வடக்கு கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றில் கதைப்பதில்லை என்று நாமல் ராஜக்ஷ கூறினார்.

அதேவேளை கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கலந்துரையாடாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களது தனிப்பிட்ட விடயங்களை பேசி நிறைவேற்றிக் கொண்டதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

Share:

Author: theneeweb