கிளிநொச்சி ஜெயந்திநகரில் தாயும் மகனும் வெட்டிக் கொலை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் வெட்டுக்  காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் வசிக்கும் தற்காலிக வீட்டிலிருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதான விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
 விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விரிவாக முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

Author: theneeweb