கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (30) கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது புகைப்படங்களை ஏந்தியவாறு மக்கள் கவன ஈர்ப்பில் ஈடுபட்டதுடன், தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் முப்பதாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தாங்கள் தங்களுடைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவராலும் கைவிடப்பட்டவர்களாக இருப்பதாகவும், தங்களுக்கான நீதி கிடைப்பதற்கு எவரும் இதய சுத்தியோடு செயற்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb