துரித விவசாய மீள் எழுச்சி திட்ட நிதியே கம்பரேலிய – அங்கஜன் எம்பி

இளைஞர் அணியின் எண்ண அலைகளில்  தோற்றம் பெற்றதே மக்கள் மன்றம் உருவாக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து மக்களின் கருத்தாய்வுகளை பெற்றுகொள்ளவும் மக்களின் எண்ணங்களை மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை செயற்படுத்துவதன் மூலம் மக்களின் நிஜமான பிரதிபலிப்புக்களை ஏமாற்றம் இல்லாது செயற்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

வடமராட்சி மண்ணில் முதலாவது அத்தியாயமாக “மக்கள் மன்றம்”நிகழ்வு  வல்வெட்டி அலுவலகம் விநாயகர் வித்தியாலய மைதானத்தில் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் கல்விமான்கள், அரசியல் ஆய்வாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உடுப்பிட்டி தொகுதி மக்களின் பங்குபற்றலுடன் 29 அன்று  மதியம் இடம்பெற்றிருந்தது.

 

தொடர்ச்சியாக மக்கள் மன்றம் யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ரீதியாக பரிணமித்து மக்களின் கருத்துக்களையும் பெற்று, எமது கருத்துக்களையும் தெரிவிப்பதன் ஊடாக தீர்க்கமான முடிவுகளை எட்ட கூடிய வகையில் முடிவுகளை எடுக்க கூடிய வகையில் வழிவகுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

 

இறுதி மக்கள் மன்றம் கூடும் போது வருங்கால ஜனாதிபதியும் மக்கள் மன்ற மேடையில் ஏறுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.மக்களின் குரலே தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.அதற்காகவே பொதுவான வெளியில் மக்களின் கருத்துக்களை பிரசவிக்கும் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

மக்கள் மன்றத்தின் இணைந்துள்ள எனது நண்பரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ அவர்கள் கலந்து கொள்வதன் மூலம்  எமது மக்களின் மன ஓட்டத்தை தெளிவான முறையில் தெற்கிற்கும் தெரிவிப்பார் என நம்புகின்றேன்.

 

நாம் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே எனவும் பல்வேறு எதிர்பார்ப்புக்களின் நிமித்தம் நல்லாட்சியை உருவாக்கியிருந்ததாகவும் எனவே மக்களின் தற்போதைய  எண்ணங்கள் மக்கள் மன்றத்தின் ஊடாக இடம் பெறும் எனவும் குறிப்பிட்டார்.

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுடனும் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இருந்ததாகவும், அரசியலுக்கு கொண்டு வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் காலப்பகுதியிலே வடமாகாணம் அபிவிருத்தியை கண்டிருந்ததாகவும் ஆனால் அந் நேரத்தில் சில விடயங்கள் பேசப்படாமையானது நமது தவறாக கூட இருக்கலாம் எனவும் சுட்டிகாட்டினார்.

 

மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருக்கின்ற போதிலும் தற்போதைய அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியினுடையதே ஆனால் மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் உடன்பாடில்லை எனவும் குறிப்பிட்டார்.

 

வட கிழக்கின் விவசாய துறையினை கட்டியெழுப்ப விவசாய பிரதி அமைச்சராக்கிய ஜனாதிபதி வடக்கு கிழக்கு மாகாணங்களின் விவசாய துறையை கட்டி எழுப்புவதன் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்தையும், எமது மக்களின் பொருளாதார வலிமையை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கமே. 2019 ஆம் ஆண்டில் துரித விவசாய திட்டத்தை மீளமைத்து கொள்ள 3000 ஆயிரம் மில்லியன் ரூபாவை அமைச்சரவை பத்திரம் கொண்டு வந்திருந்தோம். ஆனால் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அவர்கள் சாட்டு போக்கான காரணங்களை கூறி மறுத்திருந்ததனால், ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது புதிய பிரதமரும் நிதி அமைச்சராகவும் இருந்திருந்த, தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் மூலம், அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கும் சமர்பிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தது.

 

எனவே வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் இருக்கின்றது. ஆனால் துரதிஷ்டவசமான சூழ் நிலையினால் நாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளதாக நினைவுபடுத்தி உரையாற்றினார்.

 

தொடர்ந்தும் உரையாற்றும் போது மூளை சலவை செய்து வாக்குகளை பெறுவதில் கூட்டமைப்பிற்கு வங்குறோத்து நிலையே ஏற்பட்டுள்ளது.

 

பணம் உள்ளவனிடமே கம்பரேலிய ஊடாக அபிவிருத்தி இடம்பெற்றுள்ளதாகவும் பாகுபாடே காரணம். பொருளாதார ரீதியாக பல்வேறு அசொவ்கரியங்களை எதிர்நோக்கியிருக்கும் விவசாயிகளினது நலன்களை கருத்தில் கொள்ளாது துரித விவசாய மீள் எழுச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டே பணம் படைத்தவர்களினதும், தமது அரசியல் சார்பானவர்களினதும் இடத்தை தெரிவு செய்து வறுமையின் பிடியில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு , சுய நலன்களுக்காக  திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

மக்களுக்கான அபிவிருத்தி இல்லை,பொருளாதார திட்டம் இல்லை, உற்பத்திகள் இல்லை, உட்கட்டுமாணம், சந்தை வாய்ப்புக்கள், அடிப்படை உரிமைகள் எதுவுமே இல்லை எமக்கான தீர்வும் அறவே இல்லை. எமக்கான இருப்பே இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

இப்போது நாம் சிந்திக்க வேண்டிய தருணம்.எம்மை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல,எமது பிரதேசத்தை வளமிக்கதாக்க,நாம் உரியவர்களை வல்லமை மிக்கவர்களை தெரிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.ஐக்கிய தேசிய கட்சியினர் அதற்கு உருத்து கோர முடியாது.

 

மக்கள் தொடர்ந்தும் அடிமையாக்கப்பட்டு அவர்களின் அபிலாசைகளை சுயநலன்களுக்காக அடகு வைத்து எம்மை எழுதி கொடுக்கும் நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

 

தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு நம்பிக்கை இழந்திருக்கும் மக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை வரவழைத்து மேலும் மூன்று வருட கால அவகாசம் கோருகின்றனர்.

 

தொடர்ச்சியாக மேலும் மூன்று வருடங்களுக்கு ஏமாற்றும் திட்டமே. 100 நாட்களில் 19 ஆவது திருத்த சட்டத்திற்கு ஒன்றாக கை உயர்த்தியவர்கள் ஒவ்வொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போதும், வரவு செலவு திட்டத்தின் போதும் ஆதரவு தெரிவித்து சுயநல சலுகைகளை வென்றெடுக்கவே.

 

அரசியல் நாடாகத்தில் அதன் மாயையில் நாம் யாரும் விழுந்து விட கூடாது.அறிவு பூர்வமாக சிந்தித்து நிதானமாக செயற்ப்பட வேண்டிய தருணம் அவற்றையே மக்கள் மன்றத்திலும் பலர் தமது கருத்துக்களாக பதிவு செய்திருந்தனர்.

 

ஏமாற்றமே எமக்கு எஞ்சியுள்ளது. அதற்காக தொடர்ந்தும் அடியெடுத்து வைக்க தயாரில்லை.  நாம் சிந்தித்து முடிவெடுக்கா விட்டால், எமது எதிர்கால பயணத்தில் தீர்மானிக்கும் திராணி அற்றவர்களாக உருவாக்கப்பட்டு விடுவோம்.

 

ஐக்கிய தேசிய கட்சி எமது பரம எதிரியே, எமது அழிவின் ஆரம்பமே இவர்கள் தான். எமது வரலாற்று மூலத்தையே அழித்தவர்கள் என அங்கஜன் இராமநாதன் அவர்கள் மக்கள் மன்றத்தில் சூளுரைத்துள்ளார்.

நாம் அதற்கு துணை போக முடியாது.அதற்கு எதிரான சக்தியை ஒன்றிணைந்து உருவாக்குவதன் மூலம் நிஜமான எதிர்காலத்தை காணலாம்.

மக்களுக்கு விரோதமான முதலாலித்துவ கொள்கையுடைய அரசை நாம் விலக்கி கொள்ள வேண்டும்.

இரண்டு ஜனாதிபதிகளும் இணைந்தால் நிற்சயமாக மிக பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.

தருவேன் என ஏமாற்றுபவர்களை விட தரமாட்டேன் என கூறுபவர்களிடம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து மக்களுக்கான பாதையை உருவாக்கி கொடுக்க வேண்டும்.இளைஞர்களும் அதன் மாற்றத்தில் பங்காளர்களாக இடம் பெற வேண்டும்.யுத்தத்தின் கொடூர பார்வைகளை அனுபவித்த நாம் எமது அடுத்த தலைமுறையினரும் அதன் தடங்களில் இருந்து விடுபட்டு எமது வளமான வாழ்க்கை முறையினை ஏற்படுத்தி கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் மக்கள் மன்றத்தில் கலந்து கொண்டு  உரையாற்றியிருந்தார்.

Share:

Author: theneeweb