ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரணதண்டனை

ஒரு கிலோ 68 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கப்ஜி ஜெயலாப்தீன் ஜெஸ்மின் ரிஸ்வான் என்ற இந்த சந்தேக நபர் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி அன்று மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

அந்த சந்தர்ப்பத்தில் விற்பனை செய்யும் நோக்குடன் வைத்திருந்த ஒரு கிலோ 68 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரினால் கண்டுப்பிடிக்கப்பட்து.

இவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இராசாயன ஆய்வு திணைக்களம் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 321 கிராம் ஹெரோயின் அதற்குள் அடங்கியிருந்ததாக நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எந்தவித சந்தேகமும் இன்றி உறுதி செய்யப்பட்டதால் மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலு ஆராச்சி இந்த மரண தண்டனையை விதித்தார்

Share:

Author: theneeweb