பாடசாலைகளில் முதற் தடவையாக விதைப்போம் உழைப்போம் உயர்வோம் செயற்றிட்டம்

கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் விதைப்போம், உழைப்போம், உயர்வோம் விசேட செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்(31) விதை எனும் தலைப்பில் காவேரி கலா மன்றத்தின் அனுசரணையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலைகள் சமூகத்தின் ஒரு பகுதி என்ற வகையில் சமூகத்திற்கான பங்களிப்பை மேற்கொள்ளும் வகையில் மாணவர்களுடைக்கிடையே கற்றலுக்கு அப்பால் சமூக மாற்றத்திற்கான நல்ல செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்படி செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் இயற்கை சூழலை பகைத்துக்கொள்ளாத, அதேவேளை உழைப்பின் ஊடாக உயர்வை நோக்கி பயணிக்கின்ற வகையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 81 ரூபாவுக்கு 12 முருங்கை விதைகள் வழங்கப்பட்டு அவற்றை அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 25 நாட்கள் பராமரித்து பின்னர் இன்றைய தினம்(31) அதில் ஒன்றை வீட்டிக்கும் மற்றொன்றை பாடசாலைக்கும் வழங்கியதோடு மிகுதி 10 முருங்கை கன்றுகளை 700 ரூபாவுக்கு பாடசாலை பெற்றோர்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

முருங்கை இலையை அறுவடை செய்வதனை நோக்காக கொண்டு குறித்த கன்றுகளை வளர்க்க வேண்டும் எனவும் மூன்று மாதங்களுக்கு பின்னர் முதற் அறுடையை தொடர்ந்து தொடர்ச்சியாக பத்து முருங்கை மரங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரம் வரை வருமானத்தை பெற முடியும் எனவும் செயற்றிட்ட ஆசிரியர் டிலோஜன் குறிப்பிட்டார். இத் திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை கிளிநொச்சி காவேரி கலாமன்றம் வழங்கி வருகிறது.

பாடசாலை முதலவர் திருமதி மாணிக்கவாசகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி.யேசுவா, கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அமிர்தலிங்கம், ஆசிரிய ஆலோசகர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb