போலி விசா மூலம் வௌிநாடு செல்ல முற்பட்டவர்கள் கைது

போலி விசாவை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முற்பட்ட சோமாலிய நாட்டுப் பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் போலி விசாவை பயன்படுத்தி புதுடில்லி ஊடாக சுவீடன் நாட்டுக்கு செல்ல முற்பட்டுள்ளதுடன், மற்றொரு நபர் இதற்கு உதவி ஒத்தாசை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 மற்றும் 22 வயதுடைய சோமாலிய நாட்டுப் பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Author: theneeweb