ஜெயந்திநகர் இரட்டைக் கொலையாளி கைது

நேற்று அதிகாலை கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த போது கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வீட்டாருடன் தனக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதனால் அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று அதிகாலை ஒன்று முப்பது மணியளவில்  அவர்களின் வீட்டுக்குள் புகுந்து கம்பி ஒன்றினால் வீட்டு இளைஞனை தாக்கியதாகவும் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த விசாரணைகளை  மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், குற்றத் தடவியல் பொலிஸார்    சந்தேக நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு  சென்று வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை இறைத்து சோதனை செய்த பொழுது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றும் பொலிஸாரால்  மீட்கப்படுள்ளது.

அத்துடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Share:

Author: theneeweb