101பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 101 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி ராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பிரதம ஆதியாக கலந்து கொண்டு  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிமயனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஏ9 வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டசெயலகதிறன் விருத்தி நிலையத்தில் இன்று (01.08.2019) நடைபெற்றது.

நாடளாவிய ரீதியாக பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசத்திற்கு 86  பேரும்,பூநகரி பிரதேசத்திற்கு 15 பேரும், கண்டாவளை பச்சிலைப்பள்ளி தலா 20 பேருக்கும் நியமனங்கள் வழங்கி  வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க  அதிபர் சுந்தரம் அருமைநாயகம் , மேலதிக அரச அதிபர் எஸ் சத்தியசீலன் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வின்போது கலந்துகொண்டிருந்தனர்.

Share:

Author: theneeweb