கிளிநொச்சியில் தரமற்ற வீதி அபிவிருத்திப் பணிகள், கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கிளிநொச்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல வீதி அபிவிருத்திப் பணிகள் மிகவும் தரமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.இது தொடர்பில் சில பிரதேசங்களில் பொது மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்களும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்ற 220 மீற்றர்கள் வீதிகள் பெரும்பாலானவை BOQ குறிப்பிடப்பட்டமைக்கு அமைவாக புனரமைப்புச் செய்யப்படவில்லை என்றும், ஒப்பந்த காரர்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கையூட்டை வழங்கி விட்டு தாங்கள் விரும்பியவாறு வீதி புனரமைப்பினை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் கிளிநொச்சி அம்பாள்குளம் பாடசாலை பின் வீதி 220 மீற்றர் அண்மையில் கொங்றீட் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது. வீதியின் இருபுறமும் கிரவல் கொண்டு பக்க அணைப்புச் செய்ய வேண்டும் ஆனால் ஒப்பந்தகாரர் வீதியில் உள்ள ஊத்தை மண்ணை அரைகுறையாக இருபுறமும் அணைப்புச் செய்துவிட்டு வீதி அபிவிருத்தியை நிறைவு செய்துள்ளனர். இது சாதரண ஒரு மழைக்கும் கறைந்து சென்றுவிடும் அதன் பின்னர் குறித்த வீதி போக்குவரத்துக்கு ஆபத்தானதாக காணப்படும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள், கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர்

Share:

Author: theneeweb