நிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தாருங்கள் வறட்சியால் வாடும் பொன்னகர் மக்கள் கோரிக்கை

ஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர  நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி பொன்னகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்னகர் கிராமத்தில் 586  குடும்பங்களைச் சேர்ந்த 2100 பேர் வாழ்கின்றனர். கிராமத்தின் பெரும்பாலன பகுதிகள் வருடத்தின் வறட்சியான காலத்தில் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாது மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இக் காலத்தில் மாவட்ட அனர்த்த முகாத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் குடிநீர் மாத்திரமே விநியோகிக்கப்படுவதனால் பொது மக்கள் ஏனைய  நீர்த் தேவைகளுக்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தங்களின் நீர்ப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நிரந்தர குழாய் வழி நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு பொன்னகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
த்தோடு குறித்த பிரதேசத்தில் தென்னை உட்பட பல பயன்தரு மரங்களும் வறட்சியால் கருகி வருகின்றமையையும் காணக் கூடியதாக உள்ளது.
கிளிநொச்சி  மாவட்டத்தை பொறுத்தவரை கரைச்சி,கண்டாவளை,பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் 02-08-2019 திகதியில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பரிவின் தகவல்களின் படி 7947 குடும்பங்களைச் சேர்ந்த 27564 பேர்  வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பூநகரி  பிரதேச செயலக பிரிவே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
Share:

Author: theneeweb