முக்கொம்பன் விடுதலைப்புலிகளின் தென்தோப்பு எரிந்தது

கிளிநொச்சி முட்கொம்பனில் சின்னபல்வராயன் கட்டில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின்  தென்னந்தோப்பு இன்று(02) எரிந்துள்ளது.
2009 க்கு முன் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட குறித்த தென்னந்தோப்பு பத்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது.  யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தற்போது குறித்த தென்னந்தோப்பு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ்  கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது வரை குறித்த தென்னந்தோப்புக் காணி சிவில் பாதுகாப்பு கீழ் காணப்படுகிறது.
ந்த நிலையில் இன்றைய தினம் அருகில் உள்ள காணி ஒன்றின் பற்றைக்கு நபர் ஒருவரால் வைத்த தீ இந்த தென்னந்தோப்புக்கும் பரவியுள்ளது. தற்போது நிலவி வருகின்ற வறட்சியான காலநிலை மற்றும் காற்று காரணமாக தீ தென்னந்தோப்புக்குள வேகமாக பரவி பல தென்னை மரங்களை எரித்துள்ளது  என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 உடனடியாக பிரதேசத்தில் உள்ள இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணியாட்கள்  சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்துள்ளனர்  தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையின் தீ அணைக்கும் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தியுள்ளனர்.52
Share:

Author: theneeweb