அஞ்சலிக்குறிப்பு: தமிழ் – சிங்களஇலக்கியப்பரிவர்த்தனைக்குபாலமாகவிளங்கியஉபாலிலீலாரத்ன !

 

புதுமைப்பித்தனையும்ஜெயகாந்தனையும்ஈழத்து – புகலிடதமிழ்படைப்புகளையும்சிங்களத்திற்குவரவாக்கியஇலக்கியத்தொண்டன் ! !

 

முருகபூபதி

 

புன்னகைதவழும்முகம். தமிழில்பேசினால்குழந்தையின்மழலைஉதிரும். ஆழ்ந்தஅமைதி. இலக்கியநண்பர்களைஅரவணைக்கும்வார்த்தைகள். இந்தஅடையாளங்களுடன்வாழ்ந்தநண்பர்உபாலிலீலாரத்னஅவர்களைஇனிமேல்ஒளிப்படங்களில்தான்பார்க்கமுடியும்!

இனிமேல்நிகழும்மொழிபெயர்ப்புசார்ந்தஉரைகளில்பேசுபொருளாவார்.

தமிழ் – சிங்களஇலக்கியப்பரிவர்த்தனைமுன்னர்ஒருவழிப்பாதையாகத்தான்இருந்தது. அந்தப்பாதையைஇருவழிப்பாதையாகவும்இருகைஓசையாகவும்மாற்றியவர்களில்குறிப்பிடத்தகுந்தஒருவர்உபாலிலீலாரத்ன.

அவரதுமறைவுச்செய்திஎமக்குஆழ்ந்ததுயரத்தைஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின்மலையகம், உயிர்த்தியாகங்களினால்பசுமையானதுமட்டுமல்லாமல், இலங்கைப்பொருளாதாரத்திற்குஅறுபதுசதவீதமானஅந்நியசெலவாணியையும்ஈட்டித்தந்தது.

ஆனால், அதற்குக்காரணமாகஇருந்தமக்கள்அவலமானவாழ்க்கைதான்வாழ்ந்தனர். இன்றும்கூடஒருஐம்பதுரூபாவுக்காகவும்போராடவேண்டிநிலையில்வாழ்கின்றனர்.

1977 இல்பதவியிலிருந்தஅம்மையாரின்ஏகபுதல்வனுக்காகவேநுவரேலியா – மஸ்கெலியஎன்றபுதியதேர்தல்தொகுதிசிங்களப்பேரினரீதியாகஉருவாக்கப்பட்டது. அதன்பின்னணியில்ஆயிரக்கணக்கானஏக்கர்விஸ்தீரணம்கொண்டதமிழ்மக்கள்வாழ்ந்தமலையகக்காணிகளைஅபகரித்து, பெரும்பான்மைஇனத்தவருக்குவழங்கும்சதியைஅன்றையஅரசுமேற்கொண்டதால்வெடித்தபோராட்டத்தில்பொலிஸாரின்துப்பாக்கிச்சூட்டுக்குபலியானவர்தான்சிவனுலெட்சுமணன்என்றதொழிலாளி.

அந்தடெவன்தோட்டப்போராட்டம்குறித்துகதைகள்எழுதப்பட்டுள்ளன. தி. ஞானசேகரன்எழுதியகுருதிமலைஅந்தப்பின்னணியில்எழுதப்பட்டகுறிப்பிடத்தகுந்தநாவல்.

இனநெருக்கடிஉச்சம்பெற்றஅந்தப்பிரதேசத்தில்பிறந்துஇலக்கியப்பிரவேசம்செய்தவர்தான்அண்மையில்மறைந்துவிட்டஉபாலிலீலாரத்ன.

ஆனால், அவரிடம்இனக்குரோதம்இருக்கவில்லை. அப்பிரதேசத்தில்வாழ்ந்ததமிழ் – சிங்களமக்களிடத்தில்தோன்றியஇனமுறுகளினால்அவருக்குக்கிடைத்தபுத்திக்கொள்முதல்இனஐக்கியம்தான்.

அங்குநீண்டகாலம்வாழ்ந்தமையால், தமிழைபேசுவதற்கும்வாசிப்பதற்கும்கற்றுக்கொண்டார்.  ஆனால், தனதுதனிப்பட்டதேவைக்காகஅவர்கற்கவில்லை. அவரிடத்தில்சமூகம்சார்ந்தஆழமானபார்வைஇயல்பிலேயேஇருந்திருக்கிறது.

மலையகதமிழ்மக்களின்உணர்வுகளைபுரிந்துகொண்டமையால்தான்அவரால்தேகஹட்ட – தேயிலைச்சாயம்என்றநூலையும்எழுதமுடிந்தது.

தனதுதொடக்ககாலவேலையைதலவாக்கலையில்ஒருஅச்சகத்தில்ஆரம்பித்திருக்கிறார். இங்குமலையகத்தமிழ்மக்கள்செறிந்துவாழ்கிறார்கள். இங்கிருந்துநாடாளுமன்றத்திற்கும்பிரதிநிதிகள்தெரிவாகின்றனர்.சி.வி. வேலுப்பிள்ளையிலிருந்துசந்திரசேகரனிலிருந்துஇன்றையமல்லியப்பூதிலகர்வரையில்அதனைநாம்அவதானிக்கலாம்.

உபாலிலீலாரத்னபணியாற்றியஅச்சகத்தில்தமிழ்ப்பிரசுரங்களும்அச்சடிக்கப்பட்டமையால்அவரால், தமிழைஎளிதாகபுரிந்துகொள்ளவும்முடிந்திருக்கிறது.

அதிர்ந்துபேசத்தெரியாதவர். அதனால்எளிமைஅவரதுஇருப்பிடமாகியது. பின்னாளில்அவரதுவாழ்க்கைதலைநகரில்மருதானையில்அமைந்துள்ளகொடகேபுத்தகசாலையிலும்அதன்பதிப்பகம்சார்ந்தும்தொடங்கியதும்தென்னிலங்கையில்வசித்ததமிழ் – முஸ்லிம்எழுத்தாளர்களதும்நண்பரானார்.

நீ சுத்தமாயிட்டே. ஆமா, தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலால மிதிச்சுடுறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடுறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி, வேண்டாம்னு வெரட்டவா செய்றா? எல்லாம் மனசுதாண்டி.. மனசு சுத்தமா இருக்கணும். உனக்கு அகலிகை கதை தெரியுமோ? ராமரோட பாதத்துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்னு சொல்லுவா. ஆனா, அவ மனசாலே கெட்டுப்போகலை. அதனால்தான் ராமரோட பாதத்துளி அவ மேலே பட்டுது. கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை. எதுக்குச் சொல்றேன்னா, வீணா உன் மனசும்

கெட்டுப்போயிடக் கூடாது பாரு… கெட்ட கனவு மாதிரி இதை மறந்துடு. உனக்கு ஒண்ணுமே நடக்கலை “ 

இந்த வரிகள் இலக்கியவாசகர்களுக்கு நினைவிருக்கிறதா?நாமெல்லாம்இலக்கியப்பிரவேசம்செய்தகாலப்பகுதியில்நாம்படித்தவைரவரிகள்

1966 ஆம் ஆண்டில் நவீன தமிழ் இலக்கிய உலகையே விழியுயர்த்திப்பார்க்க வைத்த வரிகள்.

அதனை ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் தனது அக்கினிப்பிரவேசம் சிறுகதைக்காக எழுதியிருப்பார்.

இந்த வரிகளையும் சிங்களத்தில் மொழிபெயர்த்தவர்தான் உபாலி லீலாரத்ன. ஆம், அவர் ஜெயகாந்தனின்அக்கினிப்பிரவேசம்உட்பட மேலும் சில கதைகளையும்  புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், நாமக்கல் கு. சின்னப்பபாரதியின் சர்க்கரை, வவுனியூர் உதயணனின் பனி நிலவு, மன்னார் எஸ். ஏ. உதயணின் லோமியா, தெணியானின் மரக்கொக்கு முதலானவற்றையும் சிங்களத்திற்கு வரவாக்கியவர். அத்துடன் டென்மார்க் ஜீவகுமாரன், பிரான்ஸ் வி.ரி. இளங்கோவன், இலங்கை பத்மா சோமகாந்தன்  ஆகியோரது படைப்புகளையும் சிங்களத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் இலங்கை இலக்கிய உலகிற்கு விட்டுச்சென்றவர். அவற்றில் கணிசமானவை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. அவ்வாறு செய்வதற்கும் அர்ப்பணிப்பு மனோபாவம் வேண்டும்.

அவரது நாவல் ஒன்றை  விடைபெற்ற வசந்தம் என்ற பெயரில் தமிழுக்கு வரவாக்கியவர் திக்குவல்லை கமால்.

உபாலியின் கடின உழைப்பு போற்றுதலுக்குரியது. தனது பெரும்பாலான நேரத்தை மொழிபெயர்ப்புக்காகவே ஒதுக்கியவர். இனமுரண்பாடுகளை இலக்கியத்தின் ஊடாக களைய முடியும் என திடமாக நம்பியவர்.

எனக்கு இவரை அறிமுகப்படுத்தியவர்கள் திக்குவல்லை கமால் மற்றும் மேமன் கவி ஆகிய இலக்கிய நண்பர்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு பொது நூலக மண்டபத்தில் ஒரு இனிய மாலைநேரப்பொழுதில் நடந்த தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை அரங்கில் நாம் சந்தித்துக்கொண்டோம்.  அச்சந்திப்பில் லண்டனிலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அவுஸ்திரேலியாவிலிருந்து என்னுடன் நடேசன், மாவை நித்தியானந்தன் ஆகியோரும், மேமன் கவி, மல்லிகை ஜீவா, கொடகே பதிப்பக உரிமையாளர் சுமணஶ்ரீ கொடகே, தெனகம ஶ்ரீவர்தன, மடுளுகிரியே விஜேரத்ன, திக்குவல்லை கமால்  ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டோம்.

அச்சந்தர்ப்பத்திலும் மல்லிகை ஜீவா, தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை இன்னமும் ஒருவழிப்பாதையாகத்தான் இருக்கிறது என்று நியாயமான ஆதங்கத்தை வெளியிட்டார்.

பின்னாளில் நிலைமை மாறியது.  தமிழ் நூல்களை  பதிப்பித்து வெளியிடவும், தமிழ் நூல்களுக்கு பரிசளிக்கவும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கவும் கொடகே பதிப்பகம் முன்வந்தது.

இந்த மாற்றம் முன்மாதிரியானது. இதுவரையில் எந்தவொரு தமிழ்ப்பதிப்பகமும்  இலங்கையில் சிங்கள நூல்களை வெளியிட்டு, சிங்கள எழுத்தாளர்களை கௌரவிக்கவில்லை.

ஆம், அத்தகைய பின்னணியில் கொழும்பு மருதானையில் இலக்கம் 661, பீ.டி.எஸ்குலரத்னாமாவத்தைஎன்றமுகவரியில்அமைந்தகொடகேபதிப்பகத்தில்பணியாற்றியவர்தான்உபாலிலீலாரத்ன.கொழும்பில்2011ஆம்ஆண்டுநாம்சர்வதேசதமிழ்எழுத்தாளர்மாநாட்டைநடத்தியபின்னர், எம்மைதமதுபணிமனைக்குஅழைத்துதேநீர்விருந்துவழங்கிஉபசரித்தார்கனவான்சுமணஶ்ரீகொடகே.

அந்தஏற்பாட்டில்உபாலிலீலாரத்னவும்முக்கியமானவர். இச்சந்திப்பில், லண்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனிஆகியநாடுகளிலிருந்துமாநாட்டிற்குவருகைதந்திருந்தபிரதிநிதிகளும்கலந்துகொண்டனர்.

அன்றுமுதல்உபாலிலீலாரத்தினவுடன்தொடர்பிலிருந்தேன். தமிழ் – சிங்களஇலக்கியப்பரிவர்த்தனையில்முஸ்லிம்எழுத்தாளர்களின்வகிபாகம்என்றஎனதுகட்டுரையையும்அவர்சிங்களத்தில்மொழிபெயர்ந்துகொழும்பிலிருந்துவெளியானஒருசிங்களசிறப்பிதழில்வெளியிட்டிருக்கிறார்.

அந்தக்கட்டுரையைவாசுதேவநாணயக்காரவும்விரும்பிப்படித்திருப்பதாகஒருசந்தர்ப்பத்தில்மனநிறைவுடன்சொன்னார்.

அவருக்குசுகமில்லைஎன்றுநண்பர்திக்குவல்லைகமால்சொன்னதும்,  தொலைபேசியில்ஒருநாள்தொடர்புகொண்டேன். அதுஅவர்மருத்துவரிடம்சிகிச்சைக்காகவந்திருந்தநேரம். அதனைஅறிந்துகொண்டு, சிரமம்தராமல்மீண்டும்பேசுவோம்என்றேன். அதன்பின்னரும்பலதடவைகள்தொடர்புகொள்ளமுயன்றும்இணைப்புகிடைக்கவில்லை.

அந்தஇலக்கமும்இனிமேல்எனதுடயறியில்மௌனத்தவமியற்றும். மனிதநேயமிக்கஇலக்கியசகோதரன்உபாலிலீலாரத்னஎமதுநெஞ்சத்தில்ரத்தினமாகவேஒளிர்ந்துகொண்டிருப்பார்.

எமதுஆழ்ந்தகண்ணீர்அஞ்சலியைஅவரதுஆத்மாவுக்குதெரிவிக்கின்றேன்.

—00—

Share:

Author: theneeweb