அநேகமான சனசமூக நிலையங்கள் இயங்காமல் மூடிக் கிடக்கின்றன.

சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரின் அசமந்தப் போக்கினால் சனசமூக நிலையங்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அநேகமான சனசமூக நிலையங்கள் இயங்காமல் மூடிக் கிடக்கின்றன. இவரின் சேவை தொடருமானால் சனசமூக நிலையங்கள் படிப்படியாக மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் எனவே இந்த உத்தியோகதருக்குப் பதிலாக வினைத்திறலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தரை நியமிப்பதற்கு தவிசாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றுஉறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ தெரிவித்துள்ளார்.

வலி.தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் அ.ஜெபநேசன்தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றுது.

சனசமூக நிலையங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டபோது உறுப்பினர் ஜிப்ரிக்கோ பேசும் போது தெரிவித்திருப்பதாவது.

ஆரம்பத்தில் 80 இற்கும் மேற்பட்ட சனசமூக நிலையங்கள் இயங்கி வந்தன. தற்பொழுது 73 ஆகக் குறைந்துள்ளன. நல்ல முறையில் இயங்கும் 46 சனசமூக நிலையங்கள் மட்டும் 2017, 2018 ஆம் ஆண்டுகளுக்கான நன்கொடையைப் பெற்றுள்ளன.

ஏனைய சனசமூக நிலையங்கள் சிறப்பாக இயங்காமையால் இந்த நிதி வழங்கப்படவில்லை. மானிப்பாய் பட்டிணத்தில்  சனசமூக நிலையங்களும் கிராமத்தில் 16 சனசமூக நிலையங்குளும் பண்டத்தரிப்பு பட்டினத்தில் 8 சனசமூக நிலையங்களும் கிராமத்தில் 17 சனசமூக நிலையங்களும் இந்நிதியைப் பெற்றுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கீழ் கடமையாற்றும் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எந்நேரமும் சந்திக்ககூடிய நிலை இருக்கின்றது. ஆனால் எமது சபையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரை சந்திக்கமுடியாது. அவர் வருவது போவது பற்றி எவருக்கும் தெரியாது. இந்த நிலையில் எவ்வாறு சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி அடையமுடியும்.

Share:

Author: theneeweb