சேது எனும் சேதுரூபனுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சேது என அழைக்கப்படும் சேதுரூபன் என்ற நோர்வே பிரஜை 8 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் வைத்து நேற்று (03) கைதான குறித்த நோர்வே பிரஜை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (03) முற்படுத்தப்பட்டார்.

கிளிநொச்சியை சேர்ந்த தனி நபர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக் கொண்டதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழங்கை இன்று ஏற்றுக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம், அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இன்று பிற்பகல் குறித்த சந்தேக நபர் பதில் நீதவான் எம். சிவபாலசுப்ரமணியம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb