ஆகஸ்ட் 11 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியினருக்கு மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டிய பகுதியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (03) ஆரம்பமான போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கூட்டணி அமைக்காது ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனைகளுக்கு கட்சிக்குள் பெரும்பான்மையாக எதிர்ப்புகள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆகஸ்ட் 11 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb