புதியசமூகசமத்துவத்தைநோக்கியவெகுஜன இயக்கம் தொகுப்பு : வி.சிவலிங்கம்.

 

சமீபகாலமாக தென் பகுதியில் புதியஅரசியல் விழிப்புணர்ச்சிஏற்பட்டுவருகிறது. இலங்கையின் அரசியல் அமைப்பு என்பது அதிகாரவர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுவதால் ஜனநாயகம் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் திகதிநாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களும்,அதன் பின்னர் 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திக திநடைபெற்ற ஈஸ்ரர் தினபடுகொலைகளும் நாட்டின் அரசியல் கட்டுமானத்தின் பலவீனங்களைஉணர்த்துகின்றன.#

தற்போது அரசியல் அமைப்பின் 19வது திருத்தம் தொடர்பாக இடம்பெறும் வாதங்கள் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் ஜனாதிபதிதாமே 19வது திருத்தத்தை ஆதரித்து பாராளுமன்றஉறுப்பினர்களிடம் 2015ம் ஆண்டு ஆதரவு கோரியிருந்தார். தற்போது இரண்டு அதிகாரமையங்களான பாராளுமன்றம், ஜனாதிபதியும் முட்டிமோதும் நிலை ஏற்பட்டவுடன் ஜனாதிபதி 19வது திருத்தம் பொருத்தமற்றதுஎனவும்,தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அதுமாற்றப்படவேண்டுமெனவும் தெரிவிக்கிறார்.

இவ் விவாதங்களை அவதானிக்கும்போது அரசியல் அமைப்பு வடிவமைக்கப்படுகையில் மக்கள் பங்களிப்பு என்பது எவ்வளவுவலுவாக இருந்தது? என்ற கேள்வி எழுகிறது. அதிகாரவர்க்கத்தினரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அரசியலமைப்பு வழைக்கப்படுவதால் அதற்கானவிலையை மக்களே கொடுக்கின்றனர்.

இதே போன்றநிலையேதமிழ் அரசியலிலும் காணப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாகதமிழ்த் தேசியவாதம் என்பதுதமிழ் அதிகாரவர்க்கத்தின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. அத் தேசியவாதம் உயிரினும் மேலானதுஎன்றஉயரத்திற்குஎடுத்துச் செல்லப்பட்டது. மிகவும் வர்ணனைகள் கலந்தவிதத்தில் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டதால் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கவரப்பட்டார்கள். உயிர்த் தியாகம் மேற்கொள்வதுபெருமைமிக்கதுஎனக் கவரப்பட்டதால் உரிமையைமீட்கபோரிட்டுமடிந்தார்கள்.

ஆனால் தமிழ்த் தேசியவாதத்தைஉச்சாடனம் செய்து,அதனைக் கற்பனைஉலகிற்கு இட்டுச் சென்றஅதிகாரவர்க்கம் எந்தவித இழப்பும் இல்லாமல் மீண்டும் அதிகாரத்தில் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்குமேலாகநடத்தப்பட்ட இக் கற்பனாவாதம் மக்கள் மேல் விதித்துள்ளகொடுமைகள் சொல்லில் அடங்கா. இவற்றைகீழிருந்துமேலாகஅவதானிப்பதுஅவசியமானது. அதாவது இத் தேசியவாதம் பலவற்றை மூடி மறைத்துத் தனதுஆதிக்கத்தைநிலைநிறுத்தியுள்ளது. இம் மூடி மறைப்புக் காரணமாகபாதிக்கப்பட்டமக்கள் வளம் குறைந்த, வளம் மறுக்கப்பட்டமக்களே. இம் மக்களே இன்றுபெரும்பான்மையினராகஎஞ்சியுள்ளனர். இவர்களே இன்றுநிலம் அற்றவர்களாக,அபிவிருத்திஅற்றவர்களாக,அதிகாரம்

அற்றவர்களாக,வேலைவாய்ப்புஅற்றவர்களாக, கூலிகளாக,வீடுகள் அற்றுஅகதிகளாக, இடம்பெயர்ந்தவர்களாக,அரசின் கொடுப்பனவுகளில் தங்கியிருப்பவர்களாகஉள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகாலப் போரும்,அதனால் கிடைத்தவாழ்வுஅனுபவங்களும் அம் மக்களைத் தற்போதுவிழித்தெழவைத்துள்ளது. இம் மக்களேகடந்த 70 ஆண்டுகாலஅரசியலையும்,அதில் தமிழ்த் தேசியவாதம் செலுத்தியபங்கினையும் மீளாய்வுசெய்து,அதற்கானமாற்றுஏற்பாடுகளைநோக்கிச் செல்லத் தயாராகியுள்ளனர். கடந்த 70 ஆண்டுகளாகதாம் தமது ஜனநாயகபங்களிப்பினைவாக்குரிமை மூலம் செலுத்தியபோதிலும் தொடர்ந்தும் அம் மக்கள் புறக்கணிக்கப்பட்டேவந்தனர். இம் மக்கள் தமிழ் மக்களுக்குள் இன்னொரு இரண்டாம் தரபிரஜைகளாகவேகணிக்கப்பட்டனர். இதுவேதமிழ் அரசியலின் செயற்பாடாகவும் அமைந்தது.
சமூகசமத்துவத்திற்கானவெகுஜன இயக்கம் என்றபெயரில் பாதிக்கப்பட்டஅனைத்துமக்களின் மீட்சிக்காகவும்,ஒருமித்த இலங்கையில் நல்லிணக்கத்திற்கானவாய்ப்புகளைஅதிகரிக்கவும், இலங்கையர் என்றபொதுஅடையாளத்தைநோக்கிப் பயணிப்பதோடு, சுய அடையாளங்களைப் பாதுகாத்துவளர்ப்பதற்கானசுயநிர்ணயஉரிமைஅடிப்படையிலானஅரசியற் கட்டுமானங்களை இதரசமூகங்களின் சம்மதத்தோடுஉருவாக்கத்திட்டங்கள்வகுத்துச் செயற்படுவதற்குசங்கற்பம் எடுத்துள்ளனர்.

தற்போதுகாணப்படும் அரசியல்,பொருளாதார,சமூககாரணிகள் ஆராயப்பட்டு 21ம் நூற்றாண்டிற்குஏற்றவாறானஅரசியல் அணுகுமுறைகளைக் கவனத்தில் கொண்டுகொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை வெவ்வேறுஅரசியல் தரப்புகள் மத்தியில் பாரியவிவாதங்களைஏற்படுத்தும் என்றஎதிர்பார்ப்புஉள்ளது.
அதன் ஆரம்பக் கட்டமாகதமதுநோக்கங்களை 6 அம்சங்களாகவகுத்துபின்வருமாறுதெரிவித்துள்ளனர்.
நோக்கம் – 01

• நாட்டின் அனைத்து இன மக்களதும் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகபண்பாட்டுவிழுமியங்களைசமூகவிஞ்ஞானகண்ணோட்டத்தில் நோக்குதல்.

இது எமதுநாட்டில் வாழும் சகலமக்களது இருப்பைஉறுதிசெய்வதற்கானஏற்பாட்டின் வழி,அதற்குஅடிப்படையானபொருள்வகைஆதாரத்தையும்,அதனைஅனைத்துமக்களும் முறையானஒருநிர்வாகவழிமுறையின் கீழ்; பகிர்ந்துகொள்வதற்கானஒருஆட்சிமுறைமையின் அவசியத்தையும், இந்தவெகுஜன இயக்கம் மேலானகவனத்தில் கொண்டிருப்பதைசுட்டிநிற்கிறது.

மேலும் எமதுநாட்டுமக்களின் இயல்பானவாழ்க்கைநிலமையில் இருந்துஅவர்கள் தமதுவாழ்க்கைக்கானவளஆதாரங்களைஎவ்வாறுஅடைந்துகொள்வது?என்பதைவிஞ்ஞானபூர்வமாகநோக்கவும் அணுகவும் கற்றுக் கொள்வதன் அவசியத்தையும் முன்நிலைப்படுத்திநிற்கிறது.

இதன் மூலம் மக்களின் வாழ்க்கைமுன்னேற்றத்தில் உறுதியானபொருளாதாரகட்டமைப்புஉருவாகக்கப்படவேண்டியதன் அவசியத்தையும்,அதன்வழியானமக்களின் வாழ்க்கைமுன்னேற்றம் உறுதிப்படுத்தப்படுவதையும்;,வெகுஜன இயக்கம் வலியுறுத்திநிற்கின்றது.

மறுபக்கத்தில் மக்களுக்கான இந்தவளஆதாரஅபிவிருத்திகள் சீராக இடம்பெறுவதைமுறையாகமுகாமைசெய்யவும், அவ்வாறேஅவைஅனைத்துமக்களுக்கும் அதுமுறையாகபங்கிடப்படுவதைஉறுதிப்படுத்துவதற்குமானஒருஆட்சிமுறைமை இல்லாதிருப்பதுகவனத்திற்குரியவிடயமாகும்.

எனவே இந்தஆட்சிமுறைமைஎமதுநாட்டில் இன்றுஎவ்வாறுஅமைந்திருக்கின்றது?என்பதையும்,அதுஎவ்வாறு இருக்கவேண்டும்?என்பதையும்,வெகுஜன இயக்கம் அவசியமானபேசுபொருளாககொண்டிருப்பதையும் இது சுட்டிநிற்கின்றது.

மேலும்,மக்களின் நலனைமேலானகவனத்திலெடுத்துஅதனைமுறையாகபாதுகாத்துப்பேணும் நோக்கில் நடைமுறைவாழ்க்கைநிலமையில் இருந்துதேவையானஅனைத்துநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் அவசியத்தையும் இந்தவெகுஜன அமைப்புவலியுறுத்திநிற்கின்றது.

அடுத்ததாக,காலஓட்டத்தில் மக்கள் எப்போதுமேதமது இயல்பானவாழ்விடநிலமைகளில் இருந்துதமதுவாழ்க்கைஎவ்வாறுஅமையவேண்டும்?அதற்காகநாம் எமக்காகஎம்மிடையேஎத்தகையஉயர்வானபழக்கவழக்கங்கள் ஒழுக்கம் ஆசாரம் அதனைவெளிப்படுத்தும் கலைவடிவங்கள் அதன்வழியானஒருபண்பாட்டுமுறைமையைமக்கள் தமக்கெனவகுத்தளித்துக்கொள்கிறார்கள்.

அவ்வாறேபல்லினசமூகங்கள் வாழும் எமதுநாட்டில்,தமக்கானகலாசாரம்,பண்பாடுகளைதமது இனம் மற்றும் மதநம்பிக்கைளுடன் தொடர்புபடுத்திக்கொண்டுதமதுதனித்துவமானவாழ்க்கைமுறைமையொன்றைவகுத்துக் கொண்டிருப்பதைவெகுஜன இயக்கம் சமுகவிஞ்ஞானநோக்கில் புரிந்துகொண்டுஅதனைஏற்றுக் கொள்கிறது.

இதன்வழி.தமதுவாழ்க்கைமுறைமைஎவ்வகையில் உயர்வானது?அதனைநாம் எவ்வாறுகட்டிக்காக்கவேண்டும்?என்பதற்கானவழக்காறுகள் அதனையொட்டியதனித்துவமானவாழ்க்கைமுறைமையை அந்தந்தமக்கள் சமுகங்கள் கொண்டிருக்கும் என்பதையும் வெகுஜன இயக்கம் புரிந்து கொள்கிறது.

அவ்வாறே,புதியஉலகஒழுங்கின் மாற்றப்போக்குகளுக்குஅமைவாகதமதுகலாசாரம்,பண்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுவதையும்,அதன்வழியேதமதுவாழ்க்கைமுறைமையில் மாற்றங்களைஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

மேலும் இப்புதியஉலகஒழுங்கில் மேன்நிலைநோக்கியஉயர்வானவாழ்க்கைமுறைமையொன்றுக்குள் எமதுமக்கள் மாறிச் செல்லவேண்டி இருப்பதையும், சமூகவிஞ்ஞானநோக்கில் வெகுஜன இயக்கம் புரிந்துகொள்கிறது.

நோக்கம் – 02
• நாட்டில் வாழும் அனைத்து இனங்களதும் சுய நிர்ணயத்தைஅங்கீகரிப்பதோடு,தமதுஉரிமைகளை ஜனநாயகவழியில் வென்றெடுப்பதற்கானஅம்மக்களின் நடவடிக்கைகளுக்குஆதரவைவழங்குதல்.

பல்தேசிய இனங்கள் வாழும் எமதுநாட்டில் ஒவ்வொரு இன மக்களினதும் வாழ்க்கைமுறைமைஅதன்வழியானமுன்னேற்றத்தைஅடையாளம் காணுகின்றஅதேவேளை,தமதுமுன்னேற்றத்தில் சக இனங்களின் முன்னேற்றம் தடைக்கல்லாகஅமைவதாகஉணரும் அல்லதுஅவ்வாறுஉணர்வூட்டப்படும் ஒருசமுகஅரசியல் முறைமைக்குள் நாட்டுமக்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைவெகுஜன இயக்கம் மேலானகவனத்தில் கொள்கிறது.

அவ்வாறே இனத்துவநிலைப்பட்டுதமது இனத்தின் தலைவிதியைதாமேதீர்மானிக்கசிந்திக்கஅல்லதுநிர்ப்பந்திக்கப்படுகின்றபோக்குகள் உருவாகி தமக்கானசுயநிர்ணயஉரிமையை கோரும் போராட்டங்கள் வலுப்பெறும் அரசியல் நிலமைகளும் இன்றுஉருவாகியுள்ளன.

இதனைவெகுஜன இயக்கம் அந்தந்த இனங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளின் நிலமையிலிருந்துவிளங்கிக் கொண்டுஅம்மக்கள் தமதுகோரிக்கையைவென்றெடுப்பதற்கானதேவையானஒத்துழைப்புமற்றும் தனதுஆதரவினையும் வழங்கும்.

மறுபக்கத்தில் அந்தந்த இனங்கள் தமதுதனித்துவத்தைநிலைநிறுத்தமுனையும் அதேசமயம் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் படிநிலைஏற்றத்தாழ்வுகள், அகமுரண்பாடுகள் மற்றும் ஒன்றையொன்றுமேலாண்மைசெலுத்தும் வெவ்வேறுசமுகப்பிரிவுகள் உருவாக்கம் பெற்றிருப்பதுமேலானகவனத்துக்குரியவிடயமாகும்.

இதன் வழியேஅந்தந்தசமுகங்கள் மத்தியிலிருந்துதமக்கானஉரிமைமறுக்கப்படுவதாக கூறும் பிற்படுத்தப்படும் பிரிவினர்தமக்குநியாயம் வேண்டிமுன்வைக்கும் கோரிக்கைகளையும் வெகுஜன இயக்கம் தனதுமேலானகவனத்துக்காகஎடுத்துக் கொள்கிறது.

மேலும் குறித்தஒரு இனத்திற்குள் பிரதேசவாதம்,வர்க்கமுரண்பாடுகள்,சாதியஏற்றத்தாழ்வு,பால்நிலைவேறுபாடுகள் காரணமாகநாட்டின் பல்தேசிய இனங்களும் (ஒவ்வொரு இனத்துக்குள்ளும்) நீண்டகாலத்தில் தமக்குள்ளேயேஉட்பிளவுகளைஏற்படுத்திக்கொண்டிருப்பது இங்கேகவனத்துக்;கரியவிடயமாகும்.

இதன் விளைவாக இலங்கையில் வாழும் இனக்குழுமங்கள் தமக்கானஒருசமச்சீரானவளர்ச்சியைதாமேமறுதலித்துக்கொள்ளும் சமுகஅரசியல் செயன்முறைக்குள் சென்றிருப்பதையும், வெகுஜன இயக்கம் சமுகவிஞ்ஞானநோக்கில் அதனைபுரிந்துகொள்கிறது.

இன்று இலங்கையின் அனைத்து இன அரசியல் தலைமைத்துவங்களுமேஅதுபெரும்பான்மை இனமாயினும் சரி,சிறுபான்மையாயினும் சரிதமக்கானஅரசியல் இருப்புக்காக,தமதுமக்கள் சக இனமக்களால் பாதுகாப்பற்றநிலையொன்றுக்குள் தள்ளப்பட்டிருப்பதாக கூறும் அரசியல் பிரச்சாரங்களில் முனைப்புபெற்றுள்ளன.

பாராளுமன்றஅரசியல் வழிமுறையில் தமதுவாக்குவங்கிக்கானசுலபமானவழிமுறையாக இத்தகையபிரச்சாரங்களில்தான் அவர்களின் எதிர்காலஅரசியல் இருப்புதங்கியிருப்பதாகவெகுஜன இயக்கம் கண்டுகொள்கிறது.

இனத்துவநிலைப்பட்ட இத்தகையபோக்குகள் காரணமாக அந்தந்த இனமக்கள் மத்தியில் பிற்படுத்தப்பட்டசமுகங்கள் அவசியம் அணுகிதீர்த்துக்கொள்ள–வேண்டியஅவர்களின் வாழ்வுரிமைக்கானபிரச்சினைகள் தொடர்ந்தும் கிடப்பில் போடப்பட்டேவந்திருக்கின்றன.

இவ்வாறுஅந்தந்த இனங்களுக்குள் அவசியம் பேசுபொருளாக்கப்படவேண்டியபிரச்சினைகளைசமத்துவத்துக்கான இயக்கம் தனதுமேலானகவனத்திலெடுத்துஅதனைகேள்விக்குட்படுத்தவிரும்புகிறது.

மறுபக்கத்தில் அந்தந்த இனங்கள் தமதுஅடிப்படைவாதநிலையில் இருந்துதமது இனத்தின் தனித்துவத்தை சக இனங்கள் ஏற்றுக்கொள்ளாமைகாரணமாகத்தான் தமக்கானஉரிமைமறுக்கப்படுவதாக கூறிக் கொள்ளும் ஒருஅரசியல் வழிமுறையும் இப்போதுமுனைப்புபெற்றிருக்கிறது.

இத்தகையபோக்குகள் காரணமாகதமது இன மக்களின் முன்னேற்றத்துக்குபிற இனத்தவர்தான் தடையாக இருப்பதாக கூறும் அதன்வழியான இனத்துவஅரசியலைமுன்னெடுக்கும் ஒருவழிமுறையேஅனைத்து இன மக்களின் மனங்களிலும் வலிந்துஊட்டப்பட்டிருப்பதாகசமத்துவத்துக்கான இயக்கம் கண்டுகொள்கிறது.

இந்த இடத்தில் நமதுதேசத்தின் ஒவ்வொருதேசிய இனத்தினதும் சுயநிர்ணயஉரிமையைவெகுஜன இயக்கம் அங்கீகரிக்கின்றஅதேநேரம், அந்தந்த இனங்களுக்குள்ளும் உரிமைமறுக்கப்பட்டுள்ளபிரிவினரின் பேசுபொருளாக்கப்படாதபிரச்சினைகளையும் இந்த இயக்கம் தனதுகவனத்துக்காகஎடுத்துக்கொள்கிறது.

அவ்வாறேஒரு இனக்குழுமத்திற்குள்பாதிப்புக்குள்ளாகும் பிற்படுத்தப்பட்டபிரிவினரின் உரிமைகளையும் முன்னிலைப்படுத்திஅம்மக்களுக்கானஅகச்சுயாதிக்கம் கேர்ரும் உரிமையைஅங்கீகரிக்கவெகுஜன இயக்கம் கடமைப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு இனமும் தமதுஉரிமைகளை ஜனநாயகவழியில் வென்றெடுப்பதற்கானஅம்மக்களின் போராட்டங்களுக்குஆதரவைவழங்குதல் எனும்போது
அது சக இனங்களின் இருப்பை,வாழ்வைமறுதலிக்கும் ஒருசெயன்முறையாகஒருபோதும் அமையாதவாறு பார்த்துக்கொள்வதைவெகுஜன இயக்கம் அவசியமான நடவடிக்கையாககருதுகிறது.

அப்போதுதான் குறித்த இனத்தின் சுய நிர்ணயஉரிமைக்கானகோரிக்கைஎன்பதுஉண்மையானதும்,நியாயமானதுமாகஅமையும் என்பதோடுஅதன்போராட்டமும் முன்வைக்கும் கோரிக்கைகளும் நடைமுறைச்சாத்தியமானதாகவும் சக இனமக்களால் அங்கீகரிக்கப்படும் ஒன்றாகவும் அமையமுடியும் என்பதைசமத்துவத்துக்கான இயக்கம் சுட்டிக்காட்டவிரும்புகிறது.

இன்றுஎமதுநாட்டில் நடைமுறையிலிருக்கும் பாராளுமன்றபிரதிநிதித்துவஅரசியல் என்பதுஆகக் கூடுதலானவாக்குகளைப் பெறும் நபர்களுக்குஅதிகாரத்தைவழங்குதல் என்பதைவழிமுறையாககொண்டிருக்கிறது.

ஆகக் கூடுதலானவாக்குகளைபெறுவதற்கானஉபாயமாகதமது இனம்,மதம் சார்ந்துசிந்திக்கமக்களை தூண்டும் செயன்முறையானதுமறுபக்கத்தில் பிற இனத்தவருக்கெதிராகதிருப்பிவிடுவதில் சென்றுமுடிந்திருப்பதேநமதுதேசத்தின் தீராப்பிரச்சினைகளின் வரலாறாக இருக்கிறது.

எனவேஒரு இனத்தின் பின்தங்கியநிலமைக்கானகாரணத்தைபிற இனத்தின் மீதுசுமத்திபரிகாரம் காணமுனைவதுதவறானஒருஅரசியல் வழிமுறையாகும்.

மறுபக்கத்தில் அதே இனத்திற்குள் குறிப்பிட்டபிரிவினரின் முன்னேற்றங்களைஅவ்வினங்களுக்குள் மேலாண்மைசெலுத்தும் பிரிவினர் மறுதலிப்பதாலும்,அந்த இனத்தின் தேசியரீதியானவளர்ச்சிமட்டுப்படுத்தப்படமுடியும் என்பதையும் சமத்துவத்துக்கான இயக்கம் சுட்டிக்காட்டவிரும்புகிறது.

அவ்வாறேஒரு இனத்திற்குள் பிற்படுத்தப்பட்டபிரிவினரின் நலவாழ்வுக்கானஉரிமைகள் மறுக்கப்படும் அதேநேரம் அதேமக்களின் வாக்குகளைஅபகரித்துக்கொள்வதற்குவசதியாகஅவர்கள் தமது இனம் சார்ந்துசிந்திக்க தூண்டப்படுவதுதவறானஒருவழிநடத்தலாகும்.

இதன் மூலம் தமது இனம்சார்ந்துசிந்திக்கவும், சக இனத்தவரைஎதிர்நிலைப்படுத்தவும் இந்தமக்கள் தூண்டப்படுவதற்குஎதிராகவெகுஜன இயக்கம் ஜனநாயகவழியில் தன்னாலானஅனைத்துநடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.

அவ்வாறேபிற்போக்கான இனவாதஅரசியலைநாட்டில் முன்னெடுக்கமுனையும் சந்தர்ப்பவாதசக்திகளைகேள்விக்குட்படுத்துவது இந்த வெகுஜன இயக்கத்தின் அவசியமானநடவடிக்கையாகஎப்போதும் இருக்கும். அவ்வாறேதொடர்ந்தும் இருந்துவரும்.

நோக்கம் – 03
• தமக்கென தனிஅடையாளங்களைக் கொண்டுள்ளதேசத்தின் பல்லினமக்கள் மத்தியிலும் சமூக சமத்துவத்தைநிலைநிறுத்துவதற்கானஏற்பாடாகஅனைத்துமக்கள் மத்தியிலும் சமாதானம் நல்லிணக்கத்தைகட்டியெழுப்புவதற்காகஉழைத்தல்.
இப்பத்தியில் இனங்கள் மத்தியிலும் இனங்களுக்கிடையேயும் சமத்துவம் அவசியமெனில் அதற்குமுன்நிபந்தனையாகஐக்கியம்,அமைதி,சமாதானசகவாழ்வுச் சூழலைமுதலில் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தைவெகுஜன இயக்கம் உணர்த்திநிற்கிறது.
நாட்டின் இனங்கள் மதங்களுக்கிடையிலானசகவாழ்வுக்குதடையாகதத்தமது இனம் சார்ந்துசிந்திக்க தூண்டும் சமகாலஅரசியல் நம்முன் எதிர்நிலைப்பட் டிருப்பதுநாட்டில் தேசியசமாதானத்தைஉருவாக்கமுனையும் சக்திகளுக்குசவாலானஒருபிரச்சினையாகும்.
தமிழ் மக்கள் தேர்தல் காலங்களின்போதுதமக்கானஅரசொன்றைஅமைப்பதற்காக இனம்சார்ந்துசிந்திக்க தூண்டப்படுகிறார்கள் என்றால் மறுபக்கத்தில் அந்தஅரசாட்சியின் கீழ் இயல்பானநிலமைகளில் தமதுவாழ்க்கைநலன்களைஅடைந்துகொள்வதற்கு இந்த இனத்துவசிந்தனைகளின் வழி உருவானமுரண்பாடுகள் தடைக்கற்களாகமுன்வந்துநிற்கின்றன.
இதனைசாமானியக் குடிமக்கள் தாம் எதிர்கொள்ளும் வாழ்நிலைநெருக்கடிகளிலிருந்துதொட்டுணர்ந்துகொள்கிறார்கள் என்பதைநடைமுறைஅனுபவங்களிலிருந்துவெகுஜன இயக்கம் புரிந்துகொள்கிறது.
தமக்கானஅடிப்படைவாதத்தின் நிலையிலிருந்துமக்களைகுழுமநிலைப்பட்டுசிந்திக்க தூண்டும் இந்தஅரசியல் தனதுஅதிகாரத்துவ இருப்பைதொடர்ந்துதக்கமுடியாதஅளவிற்குதானேஅதனைமறுதலிக்கும் ஒன்றாகஅமைந்துவிடுகிறது.
இந்தஅடிப்படைவாதசிந்தனையைஅதுதனக்குள் கொண்டிருக்கும் ஒரு அக முரண்பாடாகதமது இன மக்களின் வாழ்க்கைமுன்னேற்றங்களுக்கு இடையூறைஏற்படுத்தும் ஒன்றாகவேவெகுஜன இயக்கம் கண்டுகொள்கிறது.
தேர்தல் நோக்கங்களுக்காகமுன்நிலைப்படுத்தப்படும் இனத்துவநிலைப்பட்ட அரசியல் மறுபக்கத்தில் அந்த இனத்தின் அடிப்படையான இருப்பைஅதன் அமைதியானவாழ்வுக்கானவழிமூலங்களைமறுதலித்துநிற்கிறது.

இதனைத்தொடர்ந்துஉருவாகும் அனைத்துநெருக்கடிகளுக்கும் இந்த இனத்துவசிந்தனையேஅடிப்படையாக இருப்பதால் அதனைகேள்விக்குட்படுத்தப்படுவதைவெகுஜன இயக்கம் அவசியமானஒருநடவடிக்கையாககருதுகிறது.
தமிழர்கள் தம்மைதேசமாகசிந்திக்கநிர்ப்பந்திக்கப்பட்டபிறகுநிகழ்த்திய 30 ஆண்டுகாலப்போருக்குபின்புஉருவாகி இருக்கும் அமைதிச் சூழலானதுதாம்கடந்துவந்தபோராட்டத்தின் வழித்தடங்களைதிரும்பிப்பார்க்கவும் அதுகுறித்துஆழமாகசிந்திப்பதற்குமானவரலாற்றுஅவசியத்தை இப்போதுநிபந்தனைப்படுத்தியிருக்கிறது.
போர்ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் தமிழ் மக்களைமட்டுமன்றிநாட்டின் முழு மக்கள் மீதும் பாதிப்பைஏற்படுத்தியிருக்கின்றன.
அவ்வாறேஒவ்வொரு இனத்திற்குள்ளும் வெவ்வேறானசமுகப்பிரிவுகள் மீதுவேறுபட்டபாதிப்புக்களைஏற்படுத்தி இருப்பதை இன மதநிலைப்பட்டஅரசியல் தலைமைகள் மறைக்கமுற்படுகின்றனஅல்லதுமறுதலிக்கமுனைவதாகவேவெகுஜன இயக்கம் கருதுகிறது.
அதுமட்டுமன்றிபோரின் மறுவிளைவாகநாட்டின் ஆட்சியாளர்களும் தாம் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதாரநெருக்கடிகளின் நிலமைகளிலிருந்துதமது இருப்புக்கானதற்காலிகநலன்களுக்காகநாட்டின் நீண்டகாலநலன்களைவெளிச்சக்திகளிடம் அடகுவைக்கும் நிலைக்கு இப்போதுசென்றிருக்கிறார்கள்.
இதிலிருந்துநமதுவிடுதலைக்கானபோரையுயும் அதன் விளைவுகளையும் வெளிச்சக்திகளை; நெறிப்படுத்தநமதுதேசத்தின் ஆதிக்கசக்திகள் அனுமதித்திருப்பதைநமதுதேசம் எதிர்கொண்டுள்ளபூகோளஅரசியல் நெருக்கடியின் ஒருவிiவாகவேவெகுஜன இயக்கம் கண்டுகொள்கிறது.
மறுபக்கத்தில் இப்போரினால் தமக்கானஉரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாகஅல்லதுதமக்கானவாழ்வுரிமையின் பேரால் தமக்குகிடைக்கவேண்டியவைமறுக்கப்பட்டிருப்பதாகதமிழ் தேசத்தின் பிற்படுத்தப்பட்டவெவ்வேறுபிரிவினரும் தமதுகருத்துக்களை இப்போது வெளிப்படுத்ததலைப்பட்டுள்ளனர்.
இந்தஅணியினர்முன்வைக்கும் சமத்துவஉரிமைக் கோரிக்கைகளையும் தற்பேர்துஅதிகாரத்திலிருக்கும் தமிழ் தேசியதலைமைகள் கண்டும் காணாது இருப்பதாகஅல்லதுஅதனைமறைக்கமுற்படுவதாகவேவெகுஜன இயக்கம் உணர்ந்துகொள்கிறது.
இந்தஉரிமைக் கோரிக்கைகளுக்காகதமிழ் தலைவர்கள் பொறுப்போடுபதிலளிப்பதற்குப்பதில் சிங்களதேசத்தைஎதிர்நிலைப்படுத்துவதன் மூலம் தமக்கு இதில் உள்ளபங்கினைமறுதலிக்கமுனைவதையும் வெகுஜன இயக்கம் வன்மையாககண்டிக்கிறது.
மறுபக்கத்தில் தமக்கானவாழ்வுரிமைகள் மறுக்கப்படுவதற்கானகாரணிகளைதமிழ் தேசத்துக்குள் தான் தேடவேண்டுமெனஉரிமைகள் மறுக்கப்பட்டபிற்படுத்தப்பட்டபிரிவினர் சமுகநிலைப்பட்டுவாதங்களைமுன்வைக்கின்றபுதியஅரசியல் முனைப்புகளையும் வெகுஜன இயககம் தனதுமேலானகவனத்துக்காகஎடுத்துக் கொள்கிறது.
இவ்வாறானஒரு சூழ்நிலைமையில்தான் போரின் முடிவுக்குப்பிறகும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குகாரணமாக சக இனங்கள் பிறசமுகங்களைப்பற்றிநம் தமிழ் தலைவர்கள் கூறிவந்தகருத்துருவாக்கங்களைசிந்தனைமுறைமைகளைமறுவாசிப்புசெய்யவேண்டியதன் அவசியத்தைஎமக்குஉணர்த்தியிருக்கிறது.
இந்தமறுவாசிப்பின் ஒருவிளைவாகவேசகவாழ்வுக்கானஅவசியத்தைதேசத்தின் அனைத்து இன மக்களும் உணர்ந்துகொள்வதற்கானவழிமூலங்கள் இனம்காணப்படவேண்டும் அதுவளர்த்தெடுக்கப்படவேண்டும் என்பதில் வெகுஜன இயக்கம் தீர்க்கமானதனதுவிருப்பார்வத்தைவெளிப்படுத்திநிற்கிறது.
இந்தவிருப்பத்தினைசெயற்படுத்துவதற்கானஒருவழியாகஅடிப்படைவாதத்தைகேள்விக்குட்படுத்திஅந்த இடத்துக்குப்பதில் இனங்களுக்கிடையேநல்லிணக்கத்தையும் அதன் மூலமானநல்லுறவையும் ஏற்படுத்துவதற்கானவேலைமுறைமையொன்றை இனங்காண்பதுஅவசியமானதும் அவசரமானதுமானபணியாக இந்த இயக்கம் கருதுகிறது.
இவ்வாறுசிந்திக்கும் செயற்படமுனையும் அனைத்துதரப்பினரையும் ஒருகுடையின் கீழ் ஒன்றுபட்டுசிந்தி;க்கவும் அவ்வாறேசெயற்படுவதற்குமான களத்தைஉருவாக்கவெகுஜன இயக்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

நோக்கம் – 04
• அந்தந்தசமூகங்கள் மத்தியில் நிலவும் உள்முரண்பாடுகளானசாதியம் பால் வேறுபாடு,பிரதேசவாதம் போன்றவற்றை இல்லாதொழிக்கவும் அதனூடாகசமத்துவமானசமூகமொன்றைக் கட்டியெழுப்புதல்.

தமிழ் தேசம் தனக்குள் கொண்டிருக்கும் அகமுரண்பாடுகள்,படிநிலைஏற்றத்தாழ்வுகள் அதன்வழியானஒன்றையொன்றுமேலாண்மைசெலுத்தும் போக்கு,அவ்வாறேஒருபிரிவினரின் முன்னேற்றத்தை, இன்னொருபிரிவினர்விரும்பாதிருக்கும் இப்போக்குகள் நிலமானியசமுகத்தின் காலத்திலிருந்துதொடர்கதையாகவே இருந்துவருகின்றன.

இது ஒருசமூகசெயன்முறையாகநீண்டகாலமாகவே இருந்துவருவதைஅதன் குறிப்பானநிலமைகளில் இருந்துபுரிந்துகொள்வதோடு, இந்தஏற்றத்தாழ்வானநிலமைகளைக்கேள்விக்குட்படுத்துவதற்குமான அனைத்துநடவடிக்கைகளையும் வெகுஜன இயக்கம் தனதுமேலானகவனத்திற்காகஎடுத்துக் கொள்ளும்.

தமிழ் தேசத்தில் குறிப்பாகயாழ்ப்பாண சூழலில் சாதியம், பிரதேசவாதம்,பால்நிலைஏற்றத்தாழ்வுகள் குறிப்பிடத்தக்கபாதிப்பைஏற்படுத்தும் வகையிலானசெயற்படுதளத்தைநீண்டகாலமாகவேதன்னுள் கொண்டிருக்கிறது.

குறிப்பாகசாதியநிலைப்பட்டசிந்தனைகள் குறிப்பிட்டபிரதேசங்கள்,கிராமங்கள் அங்குவாழும் மக்களைவேறுபடுத்திச்சிந்திக்கவும் அவர்களின் வாழ்க்கைமுன்னேற்றங்களைவேறுபடுத்திபிறசமுகங்கள் நோக்குவதற்கும் வழியைஏற்படுத்தி இருக்கின்றன.

போருக்குப்பிந்தியசமகால சூழலில் பிற்படுத்தப்பட்டகிராமங்கள்,அப் பிரதேசங்களில் வாழும் மக்கள் சமூகநிலையிலும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்துவருவதைஒருவகையில் தமிழ் தேசத்தின் சாதியம் குறித்தசிந்தனைமுறையானதுஅதனைஒருவிதியாகவேகருதிஅதனைசெயற்படுத்தமுனைகிறது.

பிற்படுத்தப்பட்டமக்கள் மத்தியில் நிலவும் கல்வியறிவின்மையும்,வறுமையும் அவர்களின் சமுகநிலமையால் தான் உருவானதுஎனஅந்தமக்கள் தங்களுக்குதாங்களேசிந்தித்துகொண்டு,தமதுவாழ்வுக்கானஈடேற்றம் பற்றிக்கவலைப்படாதுஅவர்கள் வாழப்பழகிக் கொள்ளவேண்டும் என்பதுபோல் சமுகத்தின் மேன்நிலைஅணியினர் புரிந்துள்ளதாகஅல்லதுகருதுவதாகவேவெகுஜன இயக்கம் எண்ணுகிறது.

இம்மக்கள் வாழும் கிராமங்களுக்கானநிதிஒதுக்கீடுகள்,அவர்களுக்கானநலத்திட்டங்கள் தமிழ் சூழலில் செயற்பாட்டில் இருக்கும் நிர்வாகத்தரப்பால் சீராகமுறைப்படுத்தப்படுகின்றனவா?எனக்கேட்கத்தோன்றுமளவுக்குபிற்படுத்தப்பட்டமக்கள் வாழும் பிரதேசங்களின் உட்கட்டமைப்புமற்றும் அபிவிருத்திநிலமைகள் மோசமானநிலையிலேயேதொடர்ந்தும் இருந்துவருகின்றன.

மேலே கூறப்பட்டதற்கு இணங்க,பல்வேறுசமூகக் காரணங்களுக்காகதமிழ் சூழல் தனக்குத்தானேபடிநிலைகளையும்,ஏற்றத்தாழ்வுகளையும் வகுத்துக்கொண்டுதமிழ் தேசத்தின் தேசியஅபிவிருத்தியைதொடர்ந்தும் மறுதலித்துவரும் இந்தப் போக்கினைசமத்துவத்துக்கான இயக்கம் கேள்விக்குட்படுத்தும் என்பதோடுஅதனை மாற்றுவதுதனதுபிரதானபணியாகவும் கொண்டிருக்கும்.

நோக்கம் – 5
• உலகமயமாதலும் அதனூடனசுற்றாடல் பிரச்சினையும் என்கிறரீதியில் எதிர்காலத்தில் நாட்டின் முழு மக்களும் எதிர்கொள்ள இருக்கும் சூழல் பாதிப்புகுறித்துபோதியவிழிப்புணர்வைமக்களுக்குஏற்படுத்தவும் இயற்கையோடு இணைந்தவாழ்க்கைமுறைமையினைஅறிமுகம் செய்யும் வகையிலானதிட்டங்களை இனங்கண்டுமுன்னெடுத்தல்.

புதியஉலகஒழுங்கின் நிலமைகளுக்குஉட்பட்டுஎமதுதேசம் அதன் சொந்தமுகத்தை இழந்துநிற்பதன் பாதகமானவிளைவுகளையும் அதற்கானமாற்றுமுன்மொழிவுகளையும் இப்பந்தியில் வெகுஜன இயக்கம் பதிவுசெய்யவிரும்புகிறது.

திறந்தபொருளாதாரக் கொள்கைக்குஅடித்தளமாகஅமையும்; இரண்டாவதுகுடியரசுயாப்பின் அறிமுகத்தோடுஎமதுநாடுஅதன் சொந்தக்காலில் நிற்றல் எனும் அதன் சுயதேவைப் பூர்த்திக்கானபொருளாதாரக் கொள்கைக்குஏறத்தாழமுற்றுப்புள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இத்திறந்தபொருளாதாரக் கொள்கையின் அறிமுகத்தோடுதமக்குதேவையானவற்றைஉற்பத்திசெய்வதற்கானவழிமுறையிலிருந்துவிலகி, தமதுஉழைப்பைத் தமிழ் சூழலுக்குவெளியே,அவ்வாறேநாட்டுக்குவெளியேவழங்கநிர்ப்பந்திக்கப்படும் புதிய சூழல் குறிப்பாகபோருக்குபிந்திய சூழலில் தீவிரம் பெற்றிருக்கிறது.

இந்தநிலமையானது தமக்கானதேவைப்பூர்த்திஅனைத்தையும் இறக்குமதி மூலமேஈடுசெய்யமுனையும் வழிமுறைக்குள் ஏறத்தாழமுழுத்தமிழ் மக்களும் இழுத்துவிடப்பட்டிருக்கும் இந்தநிலமையைதமிழ் தேசம் எதிர்கொள்ளும் ஒருஆபத்தானநிலமையாகவேவெகுஜன இயக்கம் உணர்ந்துகொள்கிறது.

நாட்டில் எஞ்சியிருக்கும் குறைந்தபட்சஉள்ளுர் உற்பத்தி மூலங்களையாவதுதொடர்ந்துதக்கவைப்பதற்கானதொழில் நுட்பம் மற்றும் இடைத்தரஉபகரணங்களுக்காகவெளிநாடுகளில் தங்கி இருப்பதுஉள்ளுர் உற்பத்திக்கானமுதலீடுகளில் புதியபிரச்சினைகளை,நெருக்கடிகளைஏற்படுத்தியுள்ளன.

இந்தநிலமையானதுஉற்பத்தியைதொடர்ந்து இலாபகரமாகநடாத்திசெல்வதிலும்,உற்பத்தியின் தரத்தைப்பேணிஅதற்கானசந்தைவிலைகளைஉறுதிப்படுத்துவதிலும் உள்ளு}ர் முதலீட்டாளர்கள் பெரும் சவால்களைஎதிர்கொண்டுள்ளனர்.

இதில் மக்களின் அத்தியாவசியநுகர்வுக்குதேவையானவற்றைஉற்பத்திசெய்வதற்கென இறக்குமதியாகும் தொழில் நுட்பம் மற்றும் இடைத்தரஉபகரணங்கள் உருவாக்கும் உற்பத்தியைபேணுவதில் மோசமானவிளைவுகளைஏற்படுத்தியுள்ளன.

அவ்வாறே இங்குஉற்பத்தியாகிநுகரப்படும் முடிவுப்பொருட்களும் மனிதஆரோக்கியத்தைகேள்விக்குட்படுத்துவனவாகஅமைந்திருக்கும் சமகாலநிலமையானது,நாட்டில் புதியசுற்றாடல் பிரச்சினைகளைஎம் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளன. உதாரணமாக உர வகைகள் பாவனை குடி நீரைஅசுத்தப்படுத்தும் நிலமைகள்.

சமகாலநிலமையில் ஆலைமயப்பட்டஒருஉற்பத்தியில் வெளியேற்றப்படும் கழிவுபுதியசுற்றாடல் பிரச்சினையைதோற்றுவிக்கின்றதுஎன்றால் அதுஉற்பத்திசெய்யும் முடிவுப்பொருட்கள் கூடவேமனிதநுகர்வின் போதும் ஆரோக்கியத்தைகேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது.

இது மக்களின் இயற்கையோடிணைந்த இயல்பான வாழ்க்கைச் சூழலுக்குதடைக்கலாகஅமைந்துவிடுவதைஒருஆபத்தானஉற்பத்திசெயன்முறையாகவேவெகுஜன இயக்கம் அதனைஅடயாளப்படுத்தவிரும்புகிறது.

நுகர்வுக்காகமேற்கொள்ளும் ஒருஉற்பத்திநடவடிக்கையானது இயற்கை சூழலுக்குபாதிப்பைஏற்படுத்தாதவாறுகட்டமைக்கப்படும்போதுதான் அதன்வழிஉற்பத்தியானஅதன் முடிவுப்பொருளும் மனிதநுகர்வுக்குஆரோக்கியமானதாகஅமைவதைஉறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.

இதனை ஆரோக்கியமானசுற்றாடலைபேணுவதற்கனஒருவழிமுறையாக இந்த இயக்கம் கண்டுகொள்கிறது.

எனவேதிறந்தபொருளாதாரத்துக்குப்பதில் சுயதேவைப்பூர்த்திக்கானகளங்கள் பதிலீடுசெய்யப்படுவதைப்போல்,ஆரோக்கிமற்றசுற்றாடலுக்குப்பதில் இயற்கையோடிணைந்தவாழ்க்கைமுறைமைசிறந்தஒருபதிலீடாகஅமைவதுஅவசியமானஒருநடவடிக்கையாகும்..

அதற்கானவிழிப்புணர்வுநடவடிக்கைகள் மக்களுக்குஏற்படுத்துவதைநோக்கிதேவையானநடவடிக்கைகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையும் வெகுஜன இயக்கம் வலியுறுத்திநிற்கிறது.

தமதுதேவைப்பூர்த்திக்கானநேரடிஉற்பத்திநிலமைகளிலிருந்துமக்கள் அந்நியப்படுத்தப்பட்டிருப்பதானதுதாம் இறக்குமதிசெய்துநுகரும் முடிவுப்பொருட்கள் எத்தகையஆரோக்கியநிலமைகளின் கீழ் உற்பத்தியாகின்றனஎன்பதுகுறித்துஅறிந்துகொள்ளமுடியாதநிலமையையும் கூடவேஏற்படுத்தியிருக்கிறது.

இந்தஉற்பத்திகளைநுகருகின்றநமதுமக்களின் வாழ்க்கை சூழலானது இனம் புரியாதபுதியநோய்களையும் எமதுமக்களுக்குஅறிமுகம் செய்திருப்பதைஒருஆபத்தானசமுகசெயன்முறையாகவேவெகுஜன இயக்கம் கண்டுகொள்கிறது.

இன்றுஉருவாக்கம் பெற்றுவரும் புதியஉலகஒழுங்கானதுஅனைத்துமக்களையும் ஒருஆபத்தானவாழ்க்கைமுறைமையொன்றுக்குள் தள்ளிவிடுவதைநோக்கியேநகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தஉலகஒழுங்கின் அசைவியக்கமானது நமதுவாழ்விடச் சூழலில் உருவெடுத்திருக்கும் புதியசுற்றாடல் பிரச்சினைகள் எதிர்காலத்தில் மேலும் பன்மடங்குபாதிப்பைஏற்படுத்தும் வகையில் அமையவிருக்கின்றனஎன்பதைகட்டியம் கூறிநிற்கின்றது.

இந்தஆபத்தானபோக்கினைகவனத்திலெடுக்கவேண்டியவரலாற்றுநிர்ப்பந்தத்தைஉலகின் அனைத்துமக்களுக்குமேபுதியஉலகஒழுங்குஏற்படுத்தியிருக்கிறது.

இதன் மூலம் மக்கள் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை தொலைநோக்குடன் அணுகவேண்டியிருப்பதுடன் இதனைநோக்கியவிழிப்பைநாடுமுழுவதும் எடுத்துச் செல்வதற்கானபரந்தமுன்னணியொன்றின் அவசியத்தையும் வெகுஜன இயக்கம் வலியுறுத்திநிற்கின்றது.

நோக்கம் – 06
• நடந்துமுடிந்த 30 ஆண்டுகாலபோரில் மோசமானபாதிப்பினைஎதிர்கொண்டுள்ளமாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற பிரிவினருக்கானநலத்திட்டங்களை இனங்காணலும் அவற்றைச் செயற்படுத்தலும்.

இப்பத்திநடந்துமுடிந்தபோரின் மூலமானபாதிப்புக்களை,விளைவுகளைகவனத்தில் எடுக்கவேண்டியதன் அவசியத்தைகுறித்துநிற்கின்றது.

போராடும் ஒருதேசம் பாதிப்புக்களைஎதிர்கொள்ளும் மக்களின் நலனில் இருந்துதனக்கானபொருளாதாரத்தைஎவ்வாறுகட்டமைத்துக்கொள்ளவேண்டும்?என்கிறஅடிப்படையிலும் போருக்குபிந்தியதமிழ் சூழலில் நலிவுற்ற,பாதிப்புக்குள்ளானமக்களின் பிரச்சினைகள் கவனத்துக்குரியவையாகின்றன.

உண்மையில் இதனைமேலானகவனத்தில் கொள்ளவேண்டியதனியானஒருஅவசியமானநடவடிக்கையாவேவெகுஜன இயக்கம் கருதுகிறது.

இவ்வாறுபாதிப்புற்றமக்களின் வாழ்க்கையைகட்டியெழுப்புவதற்காகஉள்நாட்டில் மட்டுமன்றி,நாட்டுக்குவெளியேயும் இதற்கானவருமான மூலங்கள் இனங்காணப்படவேண்டும்.

இதில் யுத்தத்தில் சிக்குண்டுபெற்றோரை இழந்துள்ளசிறார்களின் எதிர்காலம் அவர்களின்முழுநிறைவானகல்விக்காக,சிறந்தமனிதர்களாகமாற்றுவதற்குமேற்கொள்ளவேண்டியஏற்பாடுகள் மேலானகவனத்துக்குரியவையாகவெகுஜன இயக்கம் கருதுகிறது.

மேலும் இதற்;காக இயங்கும் நலன்புரிநிலையங்களில் பராமரிக்கப்படும் பாதிப்புக்குள்ளானவர்களின் நிலமைகளும் முறையாகமுகாமைசெய்யப்படுவதுஅவசியமானநடவடிக்கையாகும்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்காகவெவ்வேறுவழிமூலங்களாலும் இதுவரைவழங்கப்பட்டஉதவிகளின் நிலைஅவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளமுன்னேற்றங்களும் முறையாகமதிப்பீடுசெய்யப்படுவதுடன்,தேவைப்படும் எதிர்காலஉதவிகள் குறித்தும் முறையானமதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதைஅவசியமானநடவடிக்கையாகவெகுஜன இயக்கம் கருதுகிறது.
முற்றும்.
தொடர்புகளுக்கு
எளiஎயடiபெயஅ@hழவஅயடை.உழஅ

Share:

Author: theneeweb