கிளிநொச்சியில் 2385 மாணவர்கள் தரம் ஐந்து பரீட்சைக்கு 2089 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கும் தோற்றுகின்றனர்.

 

கிளிநொச்சி கல்வி வலயத்தில் 2385 மாணவர்கள் இன்று(04)  தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை எழுதுகின்றனர் என கிளிநொச்சி  வலய கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று ஆரம்பமான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மன்றும் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை ஆகியவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.  தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு எட்டு இணைப்பு நிலையங்கள், பத்து பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறே க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 22 பரீட்சை நிலையங்களில்2089 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர். இவர்களில் 1128 மாணவர்கள் புதிய பாடத்திட்டத்திலும். 961 ம ாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என  வலயக் கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்கள் அனைத்திலும் பொலீஸாரின் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share:

Author: theneeweb