கிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தினை மீறும் திணைக்களங்கள்

 

கிளிநொச்சியில் உள்ள திணைக்களங்கள் தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பொது மக்களாலும், ஊடகவியலாளர்களாலும் கோரப்படும் தகவல்களை வழங்காது சட்டத்தை மீறி வருகின்றது.

மாவட்டத்தில் உள்ள சில திணைக்களில் தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் கோரப்படும் தகவல்களுக்கான பதிலை உரிய காலத்தில் வழங்காது விடுதல் அல்லது வழங்காமலே தவிர்த்து விடுதல், இழுத்தடிப்புச் செய்தல், அல்லது கோரப்படும் தகவல்களை முழுமையாக வழங்காமை போன்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இதனால் குறித்தச் சட்டம் தொடர்பில் பொது மக்கள்மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 05-07-2019 அன்று கரைச்சி பிரதேச சபையிடம் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் ஒன்றுக்கான சபையின் கட்டட அனுமதி பற்றிய தகவல் கோரப்பட்டிருந்தது. சபையின் தகவல் அறியும் அலுவலர் ந.விஜயரஞ்சனி தகவல் அறியும் படிவத்தை பெற்றுக்கொண்டு 14 நாட்களுக்கு கோரப்பட்ட தகவலுக்கான தீர்மானம் தெரியப்படுத்தப்படும் என தகவல் அறியும் சட்டத்தின் இரண்டவாது விண்ணப்பமான ஏற்பு படிவத்தின் மூலம் தெரியப்படுத்தியிருந்தால் ஆனால் இன்றுவரை(06) குறித்த தகவலுக்கான எவ்வித பதிலும் கோரப்பட்ட ஊடகவியலாளருக்கு வழங்கப்படவில்லை.

இது கரைச்சி பிரதேச சபையின் தகவல் அறியும் அலுவலரான ந.விஜயரஞ்சனியை இன்று 06-08-2019 தொடர்பு கொண்டு வினவிய போது கதைத்து விட்டு சொல்வதாக பதிலளித்துள்ளார்.

 

 

Share:

Author: theneeweb