நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறும் வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக 10 பிரதேச செயலாளர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், மாவட்ட விவசாயத் திணைக்கள பணிப்பாளர், நீர் வளங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் , நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட உதயகுமார், தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பாக இம்முறை மழை வீழ்ச்சி மிகக் குறைவாக காணப்பட்டதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வருடம் ஜனவரி தொடங்கி தற்போது வரையான காலப்பகுதியில் மழை வீழ்ச்சி மிகவும் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பாக 96 கிராம சேவையாளர் பிரிவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கப்படும் உன்னிச்சை குடிநீர் திட்டத்தில் இருந்து பெறப்படும் நீர் போதுமானதாக இல்லை என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தற்பொழுது குடிநீர் வழங்குவதில் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த வறட்சியினால் பண்ணையாளர்கள் விவசாயிகள் மற்றும் பயிற்செய்கையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக 3102 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 621.75 ஏக்கர் நிலங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறினார்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்பாக விழிப்புடன் இருந்து குடிநீரை மிகவும் சிக்கனமாக பாவிக்குமாறு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் குடிநீர் கட்டுப்பாட்டில் இருந்து மாவட்டத்தை பாதுகாப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்பொழுது நீர் பட்டு 10 மணித்தியாலம் அமுல்படுத்த படுவதாகவும் இந்த வறட்சி தொடருமானால் அடுத்த மாதம் முதல் முழுமையாக நீர்வெட்டை அமுல்படுத்தும் நிலையேற்படும் என இங்கு கருத்து தெரிவித்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு பொதுமுகாமையாளர் ரி. பிரகாஸ் தெரிவித்தார்.

குளத்தில் வழமையாக 33 அடிக்கு மேற்பட்ட நீர் தேக்கி வைக்கப்படுவதாகவும் ஆனால் தற்பொழுது ஏற்பட்ட வறட்சி காரணமாக 5 அடிக்கு குறைவான நீரே காணப்படுவதால் குடிநீரை வழங்குவதில் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Author: theneeweb