நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ இன்று (07) மீண்டும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோவை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக அவரை நேற்று கடான பொலிஸார் கைது செய்திருந்தனர்.

ஜூன் மாதம் 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நீர்கொழும்பு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த் 53 வயதுடைய ஜயவீர ஆரச்சிகே ​ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb