கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டத்திற்கு முரணாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இரணைமடு குளத்தில் நேற்று(10) பகல் 7பேர் இவ்வாறு சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.  அரசினால் தடை செய்யப்பட்ட தங்கூசி வலையை பயன்படுத்தி இவ்வாறு குறித்த நபர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை இரணைமடு நன்னீர் மீனவர் சங்க அங்கத்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த ஏழு பேரில் ஒருவர் 13 வயது சிறுவன் என்பதால் அவரை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த அதேவேளை ஏனைய ஆறுபேரையும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தன்போது அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ இரால் மற்றும் தங்கூசி வலை என்பவற்றுடன் உள்ளுர் உற்பத்தி கட்டுத்துவக்கும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதுடன், அவற்றையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தற்போது இரணைமடு குளத்தின் நீர் வற்றியுள்ள அதேவேளை இவ்வாறான சட்டத்திற்கு முரணான மீன்பிடியினால் மீனவர்களாகிய தாம் பாதிக்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடு குளத்தில் பிடிக்கப்படும் இரால் ஏற்றுமதி பொருள் என்பதால் அதன் பெறுமதி கிலோ ஒன்று 1000 ரூபா என்பது குறிப்பிடதக்கதாகும்.
Share:

Author: theneeweb