காத்தான்குடியில் 730 பேர் அதிரடியாக கைது

மட்டக்களப்பு – காத்தான்குடி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களில் அதிக வேகத்துடன் வாகனங்களைச் செலுத்திய 730 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்மூலம் அவர்கள் அபராதமாக 22 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு குறித்த பகுதியில் அதிகவேகத்தில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 304 பேர் கைதானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை உத்தியோகத்தர் பணி நீக்கம்

மட்டக்களப்பு – காத்தான்குடி காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காவற்துறை திணைக்கள பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தின் சமையல் பகுதிக்கு பொறுப்பாக இருந்த குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சமையல் பொருட்களை கொள்வனவு செய்யும் போது குறித்த பண மோசடியில் ஈடுபட்டதாக காவற்துறை உயர் அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb