வவுனியாவில் ஆயுதங்களுடன் சிக்கிய நபர்!!

வவுனியா – புளியங்குளம் – புதூர் கேவில் பகுதியில் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய இந்த ஆயுத தொகை கைப்பறப்பட்டுள்ளது.

வவுனியா – சாலம்பகுளம் பகுதியை சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி வவுனியா – புளியங்குளம் – புதூர் கேவில் பகுதியில் ஆயுதங்களுடன் கூடிய பையை கைவிட்டு தப்பிச் சென்ற நபர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நபருக்கு கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை குறித்த சந்தேக நபரே வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தப்பிச்சென்ற சந்தேக நபர் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சந்தேக நபரின் வீடு மற்றும் அதனை அண்டிய பகுதியில் ஆயுதங்கள் இருக்கின்றதா? என புளியங்குளம் காவல்துறையும், காவல்துறை அதிரடிப்படையினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Author: theneeweb